தமிழகத்தின் முதல் ஆடலரசன் சிற்பம் பெற்ற சீயமங்கலம் குடைவரைக் கோயில்!

Seeyamangalam Avanibhajana Pallaveshwaram Cave temple

சீயமங்கலம், சிம்மமங்கலம் என்று பல்லவர் காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூரில், குடைவரைக் கோயில் ஒன்றை அமைத்து அழகு பார்த்தான் மகேந்திரவர்மன். 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரைக் கோயிலின் எதிராக வலது புறம் அமைந்துள்ள மிகப் பெரிய ஏரியும் அதன் நடுவில் ஆங்காங்கே செங்குத்தான தூண்களைப் போன்ற பாறைகளும் இயற்கை அழகுடன் அமைந்துள்ளன. 

Seeyamangalam Avanibhajana Pallaveshwaram Cave Temple

இயற்கையாக அமைந்துள்ள இத்தூண் அமைப்புகளால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஈசனுக்கு ‘தூணாண்டார்‘ என்றும் ‘ஸ்தம்பேஸ்வரர்‘ என்றும் அழைக்கப்பட்டுள்ளார். இங்குள்ள கல்வெட்டு இக்குடைவரைக் கோயிலை “அவனிபாஜன பல்லவேஸ்வரம்” எனக் கூறுகிறது. இக்குடைவரை பிற்காலத்தில் சோழ, விஜய நகர அரசர்கள் கால மண்டபங்கள், கோபுரங்கள், திருமதில் மற்றும் பரிவார தேவதைகளுக்குக் கோயில்கள் ஆகியவற்றைக் கொண்டு தற்பொழுது விரிவுபெற்று விளங்குகிறது.

முகப்பிலுள்ள தூண்களின் மேல் சதுரப்பலகையில் ஆடவல்லானின் சிற்பமும், மற்றொன்றில் ரிஷபாந்தகர் சிற்பமும் காணப்படுகின்றன. இவை அளவில் சிறியதாயினும் பார்ப்பவர்களின் நெஞ்சையள்ளும் சிற்பங்களாகும். 

ஆடவல்லான் சிற்பம் தமிழ்நாட்டில் உள்ள ஆடவல்லான் சிற்பங்களில் முதன்மையானதாக விளங்குகிறது. நான்கு கைகளைக் கொண்ட ஆடவல்லானின் கைகளில் தீச்சட்டி, பரசு, அபய முத்திரை, லோலஹஸ்தம் ஆகியவை காணப்படுகிறது. வலக்காலின் முன்பு அரவம் ஒன்று அழகுற மேலெழுந்து வளைந்து காணப்படுகிறது. “புஜங்க த்ராஸம்” என்பது நடக்கும்போது பாம்பொன்று குறுக்கிடுகையில் முன்வைக்கும் நிலையிலிருக்கும் காலை சட்டென்று ஒதுக்கிப் பாம்புக்கு இடையூறில்லாமல் வழிவிடுவதைச் சுட்டும் கரணமாகும். இதை அழகுற வடித்துள்ளனர். 

ரிஷபாந்தகர் சிற்பத்தில் காளையுடன் காணப்படும் சிவன் நான்கு கைகளைப் பெற்றுத் திகழ்கின்றார். இரு காதுகளிலும் பனையோலைக் குண்டலங்கள். கழுத்தில் சரப்பளி, மார்பில் முப்புரிநூல், இடையில் உதரபந்தம், தோள்வளை ஆகியவை அழகுற வடித்துள்ளனர். கைகளுள் ஒன்றை காளைமீது இருத்தியவாறு நின்ற நிலையில் இருக்கும் இவரது அருகில் பார்வதி திரிபங்க நிலையில் காட்சி தருகிறார். 

குடைவரையின் முகப்புத்தூண்களின் பக்கவாட்டில் பாறையில் வீரர்களின் சிலைகள் இரண்டு மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. வடபுறம் உள்ள வீரன் இடது கையில் கேடயமும், வலது கையில் ஓங்கிய நிலையில் தடி போன்ற ஆயுதமும் கொண்டு காட்சியளிக்கின்றான். தெற்குச் சுவரில் உள்ள வீரன் கேடயத்தை இடது கையில் ஏந்தித் தலைக்குமேல் குடையைப்போல் பிடித்துக்கொண்டு வலதுகையால் தடியைச் சுழற்றிப் பிடித்தவாறு சித்தரிக்கப்பட்டுள்ளான்.

Seeyamangalam Avanibhajana Pallaveshwaram Cave Temple
Seeyamangalam Avanibhajana Pallaveshwaram Cave Temple

கருவறையின் இருபக்கமும் அதிட்டானம் போன்ற அமைப்பும் அதன் முன்பு மூன்று படிகளுடன் கூடிய அரைவட்டப் படியும் அமைக்கப்பட்டுள்ளது. சோழர்கால ஆட்சியில் இவ்வூர் “பல்குன்றக் கோட்டத்தில் தென்னாற்றூர் நாட்டு சீயமங்கலம்” என்றும் இறைவன் “திருக்கற்றளி மகாதேவர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். இராஷ்டிரக்கூட மன்னரான கன்னரதேவரின் மகள் அக்கயதேவி என்பவர் இப்பகுதியின் நிர்வாகத்தினை மேற்கொண்டிருந்ததாக இம்மன்னரின் கல்வெட்டு கூறுகிறது. பிற்கால சோழர்கள் காலத்தில் சீயமங்கலம் குலோத்துங்கசோழ நல்லூர் என்றும் இறைவன் “உடையார் தூணாண்டார்” என்றும் இக்கோயில் “தூணாண்டார் கோயில்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“லலிதாங்குரேன ராஞ
அவனிபாஜன பல்லவேஷ்வான் நாம
காரிதம் எதத் ஸ்வேதா
காண்டம் இவ புண்ய ரத்னானாம்”

அவனி பாஜன பல்லவேசுவரம் என்னும் இக்கோயிலை லலிதாங்குர மன்னன் தன் மனதைப் பெட்டியாயும், நன்மையை அதற்குள் வைக்கும் நகையாகவுங் கொண்டு வெட்டுவித்தான் என்று மகேந்திரவா்ம பல்லவனின் கல்வெட்டு கூறுகின்றது.

கால வெள்ளத்தால் அழிக்க முடியாத கற்பாறைகளைக் குடைந்து கல்லுளிகளையே மந்திரக் கோல்களாகக் கொண்டு குடைவரைகளை உருவாக்கித் தங்களது புகழினை நிலைநிறுத்திச் சென்றவா்கள் பல்லவ மன்னா்கள். பல்லவா்கால சிற்பிகளின் மகேந்திர ஜாலங்கள் இன்றும் அவா்களைத் தலைசாய்த்து வணங்கச் செய்கின்றன. நீங்களும் நேரம் கிடைத்தால் நேரில் சென்று காணுங்கள்.

Avanibhajana Pallavesvaram Cave Temple

Seeyamangalam, near Vandavasi, Tiruvannamalai District


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


Mahendravarman I constructed a rock-cut temple in this village, and the present name of the village is a corruption of Simhamangalanam, named after Narasimhavarman I (630-668 CE), son and successor of Mahendravarman I appears incorrect as the village was in existence before his time. The earlier inscriptions mention this rock-cut temple as “Avanibhajana Pallaveshwaram”. The rock-cut cave temple forms the central shrine of the Stambhesvara or Tunandar temple, with structural additions of the late Pallava, Chola and Vijayanagar times. 

Similar to other cave temples of Mahendravarman, this complex is also organised using the Mukha mandapa and Ardha mandapa, separated by a row of pillars. To the North and South, the pillar has bas-relief sculptures. That on the top of the northern pillar represents Siva as Vrishabhantika. Siva is standing four-armed, the upper two holding mriga and akshamala, lower right in kati and the lower left resting by the elbow on the inturned face of the bull standing behind with his fingers caressing the bull’s snout. In front of the bull and to the left of Siva stands Parvati in Tribhanga, two-armed, the left arm in kați and the right holding a flower (lilä-kamala). She wears a jata-makuta like Siva and stands under a tree.

On the upper Saduram of the southern pilaster is Siva dancing, perhaps the earliest extant representation of such a form in the South. He is four-armed, and in front of his right foot and below the upraised and swirling left leg is a coiled serpent with its hood raised.

Below the lion of the southern pillar and occupying the front face of the Kattu is the foundation inscription of Mahendravarman, which he designated as Lalitänkura and the name of the cave temple is mentioned as Avanibhajana-Pallavesvaram, reading,

“Lalita[m]kurena rajñ-Ava=
nibhaja[na]-Pallavesvaran-nama
käritam itat-sve[dh]a (chcha)-karanda-
m iva punya-ratnānām”

Sri Sthambeswarar Temple, Avanibhajana Pallaveshwaram Temple, Rock Cut cave Temple at Seeyamangalam, near Vandavasi, Thiruvannamalai, Seeyamangalam, Avanibhajana Pallaveshvaram Cave Temple, Stambhesvara Temple, Tunandar Temple, Mahendravarman I, Simhamangalanam

தூண் ஆண்டார் கோயில், ஸ்தம்பேஸ்வரர் கோவில், ஸ்தம்பேசுவரர் கோயில், சீயமங்கலம் குடைவரை, குடைவரை, அவனிபாஜன பல்லவேஸ்வரம், அவனிபாஜன பல்லவனேஸ்வரம், மகேந்திரவர்மன், திருவண்ணாமலை, சீயமங்கலம் 


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan


Chithiram Pesuthada