Hidden Histories: The Untold Story of Tirumalpur’s Konar Temple!

Tucked away in the peaceful village of Tirumalpur in Ranipet District lies the little-known Konar Temple—a quiet but significant piece of Tamil Nadu’s heritage. Though not widely recognized today, the temple holds layers of history, tradition, and architectural interest. How to Reach the Temple The Temple is situated on the Tirumalpur to Panappakkam route, which…

பல்லவ பேரரசின் அறிய பொக்கிஷம் – வீரட்டேசுவரர் கோயில்

பல்லவ பேரரசின் கடைசி அரசரான “அபராஜிதவர்ம பல்லவன்” ஆட்சி காலத்தில் நம்பி அப்பி என்பவர் கருங்கற்களை கொண்டு செஞ்சடைஈசர்க்குக் தூங்கானைமாட வடிவிலான இக்கோயில் கட்டியுள்ளார் என்று இக்கோயில் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. நற்கலைகள் எல்லாம் நவின்ற சீர் நம்பி அப்பி விருப்பத்துடன் இக்கோயிலை பொற்புறக் கட்டினார் என்பதைப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஒரு வெண்பா மூலம் பாடி அதனைக் கல்வெட்டாகவும் வெட்டி வைத்துள்ளான். “திருந்து திருத்தணியல் செஞ்சடை யீசர்க்குக்கருங்கல்லால் கற்றளியா நிற்க – விரும்பியேநற்கலைக ளெல்லா நவின்றசீர்…

வேண்டிக்கொண்டவர்களுக்கு அனைத்தையும் அருளும் கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார்

கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடைய மகாதேவர் ஆலயம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்திலிருந்து தக்கோலம் வழியாக சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கேசாவரம். அதாவது “கயிலாய ஈஸ்வரம்” என்பதே மாற்றம் பெற்று “கேசாவரம்‘ பெயர் மறுவியுள்ளது. மூன்று நதிகள் இங்கே சங்கமிப்பதால் புராணங்கள் இவ்விடத்தை “மோக்ஷ த்வீபம்” என்று அழைக்கின்றது. உத்திரவாகினியில் நீராடினால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். அப்படியாக வடக்கு நோக்கி பாய்கின்ற கொசஸ்தலை ஆறும், நாம் பார்க்க போகும் இந்த கைலாச ஈசனின் திருப்பாதத்தில் உருவானதாகப்…

கொற்றவை வழிபாடு | தூக்கு தலை நடுகற்கள் | தூங்கு தலை

சோழர் காலத்தின் (10 ஆம் நூற்றாண்டு) மாவீரர் கல் / நடுகல் (தூங்கு தலை அல்லது தூக்கு தலை) ராணிப்பேட்டை மாவட்டம் பாலூர் எனும் ஊரில் உள்ளது. முற்காலத்தில் கொற்றவை வழிபாட்டில் ஒன்றாக கருதப்பட்டது இந்த நடுகல் மரபு. இவ்வகையான நடுகல் மிகவும் அரிதானதாகும். இங்கே வீரன் ஒருவனின் தலையில் உள்ள குடுமியை ஒரு மூங்கிலில் கட்டப்பட்டு, பிறகு அவரது தலை துண்டிக்கப்படும். தலை துண்டிக்கப்படும்பொழுது மூங்கிலின் உந்து சக்தியால், குருதி தெறிக்க வீரனின் தலை பாகம்…

கோவில்களில் துவாரபாலர்கள்!

கோவில் வாசலில் துவாரபாலர் இருவர் இருப்பதை நாம் காணமுடியும். “துவாரா” என்ற சொல் “வாயில்” என்றும், பால என்பது “காப்போன்” என்றும் பொருள்படும். கோவில்களில், துவாரபாலர் படிமங்கள் தல புராணத்தின் பின்னணியில் வைக்கப்பட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். பொதுவாக துவாரபாலர்கள் கோவில் வாயில்களின் இருபுறங்களிலும் காணப்படும் வாயிற்காப்போர் உருவங்கள். சிவன் கோவில்களில் திரிசூலநாதர் – மழுவுடையார், சண்டி – முண்டி, உய்யக்கொண்டார் – ஆட்கொண்டார், சண்டன் – பிரசண்டன், பிரம்மா – திருமால் ஆகிய துவாரபாலர்கள் காணமுடியும். வைணவ…

அமர்ந்த கோலத்தில் மகாவிஷ்ணு!

தக்கோலம் ஜலநாதேஸ்வரர் கோவில் கருவறையின் பின்புற கோட்டத்தில் “மகாவிஷ்ணு” வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு சுகாசன கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவின் கையில் உள்ள சக்கரம், பிரயோகச் சக்கரமாக வடிவில் பார்க்க முடிகின்றது. இது கோவிலின் பழமையை குறிக்கின்றது.பல்லவர் காலத்தில் கட்டப்பெற்று, பின்பு சோழ மன்னர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் விரிவிவாக்கம் செய்யப்பெற்றது. இடம்: திருவூறல் – தக்கோலம் YouTube: https://www.youtube.com/c/chithirampesuthadaFacebook: https://www.facebook.com/chithirampesuthadasureshInstagram: https://www.instagram.com/chithirampesuthada/Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/Web: https://chithirampesuthada.com/

அபூர்வ கோலத்தில் தெக்கணமூர்த்தி!

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) தலையை சற்றே சாய்த்து பார்க்கும் அழகு வேறெங்கும் காணமுடியாது அபூர்வ கோலம். இந்த ஆசனம் மனதைக் கட்டுப்படுத்துவதாகும். தமது வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக் காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார் தெக்கணமூர்த்தி. காலடியில் முயலகன் இல்லை. வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில்…

Chithiram Pesuthada