சிவனின் ஐம்பெரும் சபைகளில் ஒன்றான திருநெல்வேலி தாமிர சபை!

Thamira sabai

நடராஜர் தன்னுடைய நடனத்தினால் சிறப்பித்த ஐந்து தலங்கள், “ஐம்பெரும் சபைகள்” என்றும், “பஞ்ச சபைகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. பொற்சபை, வெள்ளி சபை, இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே ஐந்து சபைகள் என்றழைக்கப்படுகின்றன.

இதில் திருநெல்வேலியில் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இதில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலியில் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் நடராஜர் சன்னிதியே தாமிர சபை என்று போற்றப்படுகிறது. இதற்கு “தாமிர அம்பலம்”, “தாமிர மன்றம்” என்ற பெயர்களும் கொண்டும் அழைப்பதுண்டு. இங்கு இறைவன் தாமிரத்தினால் ஆன அம்பலத்தில் நான்கு கரங்களுடன் தனது இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இந்த நடனத்திற்கு “திருத் தாண்டவம்” என்று அழைக்கப்படுகின்றது. இங்குள்ள இறைவன் சந்தன சபாபதி என்று அழைக்கப்படுகிறார்.


விளக்கின் ஒளியில் இரவு நேரத்தில் காண, கோடி கண்கள் இருந்தாலும் போதாதது.

இன்னொரு தனி சன்னதியில் சிவகாமியம்மை அருகில் நிற்க, புன்சிரிப்புடன் நாட்டியம் ஆடுகிறார் நடராஜர் என்று அழைக்கப்படுகின்ற அக்னி சபாபதி. “குனித்த புருவமும்கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்” என்று அப்பர் தனது பாடலில் கூறுகிறார்.

Thamira Sabai, Arulmigu Nellaiyappar Arultharum Gandhimathi Amman Temple, Tirunelveli
Thamira Sabai, Arulmigu Nellaiyappar Arultharum Gandhimathi Amman Temple, Tirunelveli

YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/

Thamira Sabai, Arulmigu Nellaiyappar Arultharum Gandhimathi Amman Temple, Tirunelveli

The Copper hall of dance is the most vital one in the history of Arulmigu Nellaiyappar Arultharum Gandhimathi Amman Temple, Tirunelveli. Among the different types of Halls, here Lord Shiva performed Brahma Thandavam in Copper Hall (Thamira Sabai) at Tirunelveli. Lord Utsava Moorthy is also called Thamira Sabapathi and Sandana Sabapathi. And at another corner of a separate Sannithi, where “Agni Sabapathi” dances with a smile on his lip. And he is also known as “Azhagiya Urchava Natarajar“. This was depicted in Appar’s song “Kunintha puruvamum kovvai sevvayil kumin sirippum.”

Agni Sabapathi, Arulmigu Nellaiyappar Arultharum Gandhimathi Amman Temple, Thamira Sabai, Tirunelveli
Agni Sabapathi, Arulmigu Nellaiyappar Arultharum Gandhimathi Amman Temple, Thamira Sabai, Tirunelveli
Chithiram Pesuthada