தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – கொடிக்கால் மண்டபம்!
மும்மூர்த்தி குகையிலிருந்து மேற்கு நோக்கிச் சிறிது தூரம் சென்றால் ஒரே அறையுடன் கூடிய குகைக் கோயில் குடைவித்துள்ளதைக் காணலாம். கருவறை எந்த கடவுளரும் இல்லாமல் வெறுமையாய் காணப்பட்டாலும் இருபுறம் பெண் துவாரபாலர்கள் இருப்பதால் இது கொற்றவைக்காக அமைக்கப்பட்ட கோயில் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். நீண்ட சதுரமான அமைப்புடைய இக்குடவரை கோயிலுள்ள பெண் துவாரபாலர்கள் இருவரும், மெலிந்து, வசீகரமான தோற்றத்துடன் காணப்படுகின்றனர். தென்புறமுள்ள பெண், வலது கையில் வில்லைப் பிடித்து நிற்கிறாள். வடபுறமுள்ள பெண், வலது கையில் கத்தியுடனும்…