எழில்மிகு தர்மதாரா லிங்கம்!
முப்பத்திரண்டு(32) பட்டைகளுடன் காட்சி தரும் பல்லவர் கால எழில்மிகு தர்மதாரா லிங்கம். 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. சிவலிங்கங்களில் பலவிதங்கள் உண்டு, அதில் பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வைகையான இலிங்கங்களை “தாராலிங்கம்’ என்று அழைக்கப்படுகின்றன. சிற்ப சாஸ்திரத்தின் விதிப்படி, தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகின்றது. அதாவது 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் /தாரைகள் அமைக்கப்பட்டிருக்கும். நான்கு பட்டைகள் கொண்ட…