சோழர் கால கலை பெட்டகம்! குரங்கநாதர் கோவில்!
கிபி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால கட்டடக் கலையின் மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கும் ஒரு கலை பெட்டகம் இன்று காணப்போகிறோம். குரங்குநாதர் கோவில், சீனிவாசநல்லூர் திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில், முசிறி தாண்டியதும் வருவது காவேரிகரிக்கரை கிராமம் சீனிவாசநல்லூர். இங்கே இடைக்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட குரங்கநாதர் கோவில் என்று இன்று அழைக்கப்படுகின்ற திருக்குரக்குத்துறை மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் உள்ள சிற்பங்கள் ஒவொன்றும் சோழ சிற்பக்கலையின் உச்சி என்றே கூறலாம். அந்த அளவிற்கு…