தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – வலையன்குட்டை ரதம்!
மாமல்லப்புரத்தின் எல்லைப் பகுதியில் வலையன்குட்டை அருகே அமைந்துள்ளது இந்த வலையன்குட்டை ரதம், இதனால் அதன் பெயரிடப்பட்டது என்று புலனாகிறது. பிடாரி ரதத்திற்கு தெற்கில் காணப்படும், இந்த ஒற்றைக் கல் ரதமானது வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் எழில் மிகுந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. சதுரமான நாகரி சிகரத்தை கொன்டு, இரண்டு அடுக்கு விமானமாக குடையப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய இந்த ஒற்றைக்கல் தலியானது, முகப்பில் முக மண்டபமும் அதனுடன் கருவறையும் அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபத்தின் நுழைவாயில் இரண்டு தூண்கள் மற்றும் இரண்டு அரை…