சூரியன் வழிபட்ட பதங்கிஸ்வரர் ஆலயம்!
அருள்மிகு பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பாலாற்றங்கரையில் வடக்கு புறத்தில், கிழக்கு நோக்கி அமைந்த பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பெற்றது. பின்பு வந்த சோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. முகமண்டபம் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டடுக்கு விமானத்துடன், பாதபந்த அதிட்டானத்துடன் கட்டப்பெற்றுள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து உற்றுர் கோட்டத்து பெரும்பலையூர் நாட்டு பெரும்பலையூர் என்றும் ராஜேந்திர சோழ நல்லூர் என்றும் அழைக்கப்பெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றது. முதலாம் பராந்தக சோழன், முதலாம் குலோத்துங்க…