தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – வரலாற்றுப் பயணம்!

சாஸ்த்ரா & சித்திரம் பேசுதடா குழுமம் இணைந்து நடத்திய மாமல்லை கோயில்களை நோக்கி வரலாற்று பயணம் இனிதே நடந்தேறியது! கல்லும் கதை சொல்லும் என்பது போல மாமல்லை படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும் புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுரத்தில், “தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” என்ற தலைப்பில் மாமல்லை கோயில்களை நோக்கி இந்த பயணம் 19 மார்ச் 2023 ஞாயிறு அன்று…

காஞ்சிக்கோயில்களை நோக்கி ஒரு வரலாற்றுப் பயணம்!

சாஸ்த்ரா & சித்திரம் பேசுதடா குழுமம் இணைந்து நடத்திய காஞ்சிக்கோயில்களை நோக்கி ஒரு பயணம் இனிதே நடந்தேறியது! கோயில்களின் நகரமாம் காஞ்சியிலே, கோயில் வடிவமைப்பில் பல விந்தைகள் நிகழ்த்திய பல்லவர்களின் கைவண்ணத்தில் உருவான பழமையான கோயில்களை நோக்கி இந்த பயணம் 29 ஜனவரி 2023 ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த பயணத்தில் மொத்தமாக 8 கோயில்கள் பார்க்கப்பட்டது. இளையவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் வகையில் காலை 5 மணிக்கு முன்பாகவே வந்தடைந்து எங்களை பிரமிப்பில்…

Chithiram Pesuthada