கொற்றவை வழிபாடு | தூக்கு தலை நடுகற்கள் | தூங்கு தலை
சோழர் காலத்தின் (10 ஆம் நூற்றாண்டு) மாவீரர் கல் / நடுகல் (தூங்கு தலை அல்லது தூக்கு தலை) ராணிப்பேட்டை மாவட்டம் பாலூர் எனும் ஊரில் உள்ளது. முற்காலத்தில் கொற்றவை வழிபாட்டில் ஒன்றாக கருதப்பட்டது இந்த நடுகல் மரபு. இவ்வகையான நடுகல் மிகவும் அரிதானதாகும். இங்கே வீரன் ஒருவனின் தலையில் உள்ள குடுமியை ஒரு மூங்கிலில் கட்டப்பட்டு, பிறகு அவரது தலை துண்டிக்கப்படும். தலை துண்டிக்கப்படும்பொழுது மூங்கிலின் உந்து சக்தியால், குருதி தெறிக்க வீரனின் தலை பாகம்…