பல்லவ சிற்ப கலைக் களஞ்சியம்! கங்காதர மூர்த்தி!
கிபி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுள் ஒருவரான இராசசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னவன் காலத்தில் கட்டப்பெற்ற ஒரு அழகான கற்றளி இந்த இறவாஸ்தானம். காஞ்சிபுரத்தில் உள்ள தொண்மையான கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாக கருதப்படுகிறது. ம்ருத்திஞ்ஜயேஸ்வர் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. சிவன் ஆலயங்களில் கோட்டத்தில் இடம்பெறும் மூர்த்தம் கங்காதாரர். கங்கை நதியை சிவன் தன் தலைமுடியில் ஏந்திய வடிவம். பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த, கங்கையின் வேகத்தை குறைக்க சிவபெருமான் கங்கையை தன் சடைமுடியில் தாங்கிய வடிவமே கங்காதரர் என்று கூறப்படுகிறது….