தன்னைத்தானே பலி கொடுக்கும் நவகண்டம் | அரிகண்டம் | தமிழரின் வீர மரபு | கொற்றவை வழிபாடு
முற்காலத்தில் தனது நாட்டிற்காகவும், தன நாட்டின் மன்னன் போரில் வெற்றிபெறவும் அல்லது அவர்கள் நலம் பெறவும், தாங்கள் எடுத்துக்கொண்ட திட்டங்கள் எவ்விதத் தடங்கலுமின்றி நடந்தேறவும் வீரர்கள் கொற்றவை தெய்வத்தின் முன், தங்களைத்தாங்னே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளதை நமக்கு கிடைக்கும் சிற்பங்கள், நடுகற்கள் கல்வெட்டுகள் போன்ற ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது. இதில் ‘நவகண்டம்’ என்பது கொற்றவை வழிபாட்டின் ஒரு முறையாகும். நவகண்டம்என்பதன் பொருள் நவம், அதாவது ஒன்பது, கண்டம் – துண்டங்கள். ஒரு வீரர் தன்…