கொல்லிமலை அறப்பள்ளி ஈசுவரர் கோயில்

வரலாற்றிலும், இலக்கியத்திலும் கொல்லிமலை பற்றிய செய்தி உண்டு. உதாரணமாக, அகநானூற்றுப் பாடல் ஒன்றில், “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரிசெல்லா நல்இசை நிறுத்த வல்வில்ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்தசெவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி”~ அகநானூறு, 209என்று வருவதைப் பார்க்கலாம். “வல்வில் ஓரி” என்னும் மன்னன் ஆண்ட பகுதியும், காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் தவம் செய்ததுமான இம்மலையில் நாசிக்கு மூலிகை மணமும், கண்ணுக்கு பசுமை விருந்தளிக்கும் அறப்பள்ளி எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய அறப்பள்ளி ஈசுவரர்…

9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்

9ஆம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் நான்கு வரிகள் கொண்ட கல்வெட்டும், அதன் கீழ் ஒரு வீரனின் உருவம் கொண்ட நடுகல். வீரன் தனது வலது கையை உயர்த்தி குத்துவாளை ஓங்கியவாறும், இடது கையானது முஷ்டி முத்திரையில் உள்ளது. தலைமுடி இரண்டு சுருள்கள் கொண்ட கொண்டையாக முடியப்பட்டும், அவரது இடுப்பில் மற்றொரு குறுவாளும் உள்ளது. நான்கு வரிகள் கொண்ட இக்கல்வெட்டு “கரைஞ்காட்டூர் மக்களுடன் நேர்ந்த பகைக்கு தள்ளம்பி என்பவரும், மற்றொரு வீரனும் தன்னுயிரை இழந்ததாக” குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இக்கல்வெட்டில் முதல்…

கையில் வளரியுடன் வீரனின் நடுகல்

வளரி என்ற சொல்லுக்கு மிக பெரிய வரலாறு உண்டு. இன்று வளரி என்ற சொல்லும் அதன் பயன்பாடு பற்றி நமக்கு தெரியாமல் போனாலும், இது போன்ற நடுகற்கள் மூலமாக அல்லது சங்க இலக்கியங்கள் மூலமாகவோ எங்கோ ஒருவரால் இன்றும் பேசப்பட்டு வருகின்றது. “பொய்யாகியரோ! பொய்யாகியரோ!பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச்சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றியபொன் புனை திகிரியின் பொய்யாகியரோ!”~ புறநானூறு இதில் ‘திகிரி‘ என்பது வளரியின் இன்னொரு பெயராகவும். வளரி பெரும்பாலும் போர்களுக்கும், வேட்டையாடலுக்கும்…

Chithiram Pesuthada