அமர்ந்த கோலத்தில் மகாவிஷ்ணு!

தக்கோலம் ஜலநாதேஸ்வரர் கோவில் கருவறையின் பின்புற கோட்டத்தில் “மகாவிஷ்ணு” வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு சுகாசன கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவின் கையில் உள்ள சக்கரம், பிரயோகச் சக்கரமாக வடிவில் பார்க்க முடிகின்றது. இது கோவிலின் பழமையை குறிக்கின்றது.பல்லவர் காலத்தில் கட்டப்பெற்று, பின்பு சோழ மன்னர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் விரிவிவாக்கம் செய்யப்பெற்றது. இடம்: திருவூறல் – தக்கோலம் YouTube: https://www.youtube.com/c/chithirampesuthadaFacebook: https://www.facebook.com/chithirampesuthadasureshInstagram: https://www.instagram.com/chithirampesuthada/Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/Web: https://chithirampesuthada.com/

எழில்மிகு தர்மதாரா லிங்கம்!

முப்பத்திரண்டு(32) பட்டைகளுடன் காட்சி தரும் பல்லவர் கால எழில்மிகு தர்மதாரா லிங்கம். 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. சிற்ப சாஸ்திரத்தின் விதிப்படி, தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகிறது. அதாவது 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் /தாரைகள் அமைக்கப்பட்டிருக்கும். இடம்: ராமேஷ்வரர் லட்சுமனேஷ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் Beautiful Dharmadara Linga! Thirty-two (32) striped Pallava period Dharmadara Linga and the scholars believe…

சிவராத்திரிக்கு மட்டுமே திறக்கப்படும் அதிசய கோவில்!

பிறவாதீஸ்வரர் கோவில் | பிறவாதீசுவரர் | பிறவாத்தானேசுவரர் | பிறவாத்தானம் மேற்கு நோக்கி அமைந்துள்ள பிறவாதீசுவரர் கோவிலானது, மக்களால் அதிகம் அறியப்படாத ஒரு கலை பொக்கிஷம். காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் இக்கோவிலைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இராசசிம்மன் என்று அழைக்கப்பெற்ற இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னரால் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றது. இக்கோவில் இராசசிம்மன்னனால் கைலாசநாதர் கோவிலுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் கட்டிய முதல் கோவில். Piravadeeswarar Temple | Piravasthanam | Priravadeeswarar Temple | பிறவாதீசுவரர் | பிறவாத்தானம்…

Chithiram Pesuthada