பல்லவ பேரரசின் அறிய பொக்கிஷம் – வீரட்டேசுவரர் கோயில்
பல்லவ பேரரசின் கடைசி அரசரான “அபராஜிதவர்ம பல்லவன்” ஆட்சி காலத்தில் நம்பி அப்பி என்பவர் கருங்கற்களை கொண்டு செஞ்சடைஈசர்க்குக் தூங்கானைமாட வடிவிலான இக்கோயில் கட்டியுள்ளார் என்று இக்கோயில் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. நற்கலைகள் எல்லாம் நவின்ற சீர் நம்பி அப்பி விருப்பத்துடன் இக்கோயிலை பொற்புறக் கட்டினார் என்பதைப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஒரு வெண்பா மூலம் பாடி அதனைக் கல்வெட்டாகவும் வெட்டி வைத்துள்ளான். “திருந்து திருத்தணியல் செஞ்சடை யீசர்க்குக்கருங்கல்லால் கற்றளியா நிற்க – விரும்பியேநற்கலைக ளெல்லா நவின்றசீர்…