சுயம்பு மூர்த்தியாக அருள்தரும் சாக்கோட்டை அமிர்தகலசநாதர்!
அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அமிர்தகலசநாத சுவாமி திருக்கோயில்திருக்கலயநல்லூர் – சாக்கோட்டை – கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் அமிர்தகலசநாதர் /அமிர்தகடேஸ்வரர் இறைவன் காட்சியளிக்கின்றார். திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இது 131வது திருக்கோயிலாகவும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 68ஆவது சிவத்தலமாகவும் விளங்குகின்றது. இத்தலத்தில் பச்சைக்கல்லால் ஆன லிங்கோற்பவர் சிற்பம் மிகவும் சிறப்புக்குரியது. லிங்கோற்பவர் பாதத்தில் திருமால் மகுடமணிந்த வராகமாகவும், மேலே…