கண் பார்வை அளித்த பெருங்குடி அகத்தீஸ்வரர்!
இன்றைக்கு நாம் பார்க்க போகின்ற இக்கோயில் சுந்தர சோழன் காலத்தில கட்டப்பட்ட சிவகாமி சுந்தரி உடனுறை அகத்தீஸ்வரர் கோயில், அதுவும் கண் பார்வைக்கான தளமாக இந்த கோயில் கருதப்படுகின்றது. என்ன தம்பி திடீர் என்று புராணம் பேசுற அப்படினு உங்களுக்கு தோன்றும், இதை நான் கூறவில்லை, இக்கோயிலின் கல்வெட்டுகள் கூறுகின்றது. இக்கோயிலானது திருச்சி வயலூர் செல்கின்ற சாலையில் சுமார் 8km தொலைவில், பெருங்குடி எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. தொல்லியல் துறையும் இந்த கோவில அழகா பராமரிப்பு செய்து…