இராஜேந்திர சோழன் நினைவிடமா?

பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் என்ற திருப்போந்தை ஆழ்வார் சிவன் கோயில், இராஜேந்திர சோழனின் பள்ளிப்படை என்றே செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.  ஆனால் கல்வெட்டை நன்கு ஆய்ந்த ஆய்வாளர்கள் இக்கோயில் பள்ளிப்படை கோயில் அல்ல என்றும் இது வழக்கமாக அமைக்கப்பட்ட சிவன் கோயில் என்றும் தெரிவிக்கின்றனர்.  இதற்கு அவர்கள் ஆதாரமாக கொள்வது இக்கோயிலில் உள்ள கம்பவர்மன் கல்வெட்டு ஆகும். முன்பாகவே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில் எப்படி பள்ளிப்படை கோயிலாக இருக்கும் என்பது அவர்களது வாதம்.  பிரம்மதேசம்…

தமிழகத்தின் முதல் ஆடலரசன் சிற்பம் பெற்ற சீயமங்கலம் குடைவரைக் கோயில்!

சீயமங்கலம், சிம்மமங்கலம் என்று பல்லவர் காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூரில், குடைவரைக் கோயில் ஒன்றை அமைத்து அழகு பார்த்தான் மகேந்திரவர்மன். 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரைக் கோயிலின் எதிராக வலது புறம் அமைந்துள்ள மிகப் பெரிய ஏரியும் அதன் நடுவில் ஆங்காங்கே செங்குத்தான தூண்களைப் போன்ற பாறைகளும் இயற்கை அழகுடன் அமைந்துள்ளன.  இயற்கையாக அமைந்துள்ள இத்தூண் அமைப்புகளால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஈசனுக்கு ‘தூணாண்டார்‘ என்றும் ‘ஸ்தம்பேஸ்வரர்‘ என்றும் அழைக்கப்பட்டுள்ளார். இங்குள்ள கல்வெட்டு இக்குடைவரைக் கோயிலை “அவனிபாஜன பல்லவேஸ்வரம்” எனக் கூறுகிறது….

தமிழ்நாட்டின் பிரம்மாண்ட ராமர் கோவில்!

இன்றைக்கு நாம் பார்க்க போகும் இக்கோவில் தமிழ்நாட்டிலே பிரம்மாண்டமாக ராமருக்காக கட்டப்பட்ட யோக ராமர் கோவில். அதுபோக ராமர் இங்க வித்தியாசமா காட்சி தருகிறார், காணொளி முழுக்க எதையும் miss பண்ணாம பாருங்க அதுபோக நம்ம channel-அ இதுவரைக்கும் subscribe பண்ணாதவங்க subscribe பண்ணிக்கோங்க. இக்கோவிலுக்கு ராமச்சந்திர பெருமாள் கோவில் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இக்கோவிலானது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் இந்த பிரம்மாண்ட யோக ராமர் கோவில் இருக்கு. விஜயநகர மன்னர்களும்…

Chithiram Pesuthada