மகேந்திரவர்ம பல்லவனின் உன்னத படைப்பு சத்ருமல்லேஸ்வரம்!

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் இன்றும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அதில் தனிச்சிறப்பு வாய்ந்தது தளவானூர் குடைவரைக் கோயில். முற்காலத்தில் தலைவாய்நல்லூர் என்று அழைக்கப்பெற்ற தளவானூருக்கு வடக்கே மாம்பட்டு என்னும் இடத்தில் பஞ்சபாண்டவர் மலையில் இக்குடைவரைக் கோயிலை காணலாம். கல்வெட்டின் மூலமாக இக்குடைவரைக் கோயில் ‘சத்ருமல்லேஸ்வரம்‘ என்று அழைக்கப்பெற்றதாக அறியமுடிகின்றது. தமிழ்நாட்டிலுள்ள குடைவரைக் கோயில்கலில், முகப்பில் மகரத் தோரண பெற்ற ஒரே குடைவரை என்பது சத்ருமல்லேஸ்வராலயத்தின் தனிச் சிறப்பாகும்….

நடுநாட்டில் சோழர் கால பொக்கிஷம்! – வேதபுரீசுவரர் கோயில், ஏமப்பூர்

ஏமப்பூர் என்று தற்பொழுது வழங்கும் இவ்வூர் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூருக்கு வடக்கே மலட்டாற்றின் வடகரையிலும், பெண்ணையாற்றின் தென்கரையிலும் அமைந்துள்ளது. ஏமப்பேரூர் ஒரு தனி நாடாக விளங்கி உள்ளது. இது ராஜேந்திர சிம்ம வளநாட்டு திருமுனைப்பாடியின் ஒருபகுதியாகும். கோயில் கோட்டத்தில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் சோழர்கால கலைத்திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. பிட்ச்சாடனர், தட்சிணாமுர்த்தி, ரிஷபத்துடன் உமாசகித மூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோர் உள்ளனர். இதில் உமாசகிதர், பிட்ச்சாடனரின் சிற்பம் அழகின் உச்சம். கருவறை முகப்பில் பால கணபதியின்…

தேவார பாடல் பெற்ற நடு நாட்டு தலமான சிவலோகநாதர் கோயில்!

இங்குள்ள இறைவன் சிவலோகநாதர், சுயம்பு மூர்த்தியாக மக்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனின் காவலர்களாகிய ‘திண்டி, முண்டி’ வழிபட்ட தலமாக இக்கோயில் பார்க்கப்படுகின்றது. முண்டி வழிபட்டதால் இத்தலம் ‘முண்டீச்சரம்’ என்று அழைக்கப்பெற்று அதுவே காலப்போக்கில் ‘திருமுண்டீச்சரம்’ என்று அழைக்கப்பெற்றுள்ளது. ‘முடீச்சரம்‘ என்பதே இத்தலத்தின் புராணபெயராக இருந்துள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திய கல்வெட்டு ஒன்று “பொக்கணங் கொடுத்தருளிய நாயனார் கோயில் தானத்தார்க்கு அரசன் அனுப்பிய ஓலையிது. அதன்படி, இவ்வூரினைத் தேவதான இறையிலியாக்கி, வரிகளைக் கோயிலுக்குக் கொடுத்ததைக் குறிக்கிறது. விக்கிரமபாண்டியனான மூலத்தான வேளானின்…

இடு பிணம் தின்னும் இடாகினி பேய்!

ஓர் பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு,ஏசும் படி ஓர் இளங்கொடி ஆய், ‘ஆசு இலாய்!செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்;பொய் உரையே அன்று; பொருள் உரையே; கையில்படு பிணம் தா’ என்று, பறித்து, அவள் கைக் கொண்டு,சுடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில் சென்று, ஆங்குஇடு பிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி,மடிஅகத்து இட்டாள், மகவை இ்டியுண்ட~ சிலப்பதிகாரம் முன்னொரு நாளிலே, ‘மாலதி‘ என்பவள், தன்னுடைய மாற்றாளின் மகவுக்குப் பாலூட்டினாள். பால் விக்கிப் பாலகன் மரித்தான். மாலதியும், “பார்ப்பானோடு அவன்…

Chithiram Pesuthada