தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் | அதிரணசண்ட மண்டபம்

Atiranachanda Cave Temple

அதிரணசண்ட குடைவரைக் கோயில்!

சென்னை மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் புலிக்குகை வடபுறத்தே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதிரணசண்ட பல்லவேஸ்வர மண்டபம் என்ற பல்லவ வரலாற்றுச் சின்னம். இது ஒரு சிவன் கோயிலாகும். நீள்சதுரப் பாறையில் கிழக்கு நோக்கி அமைந்த்துள்ளது இந்த அதிரணசண்ட குடைவரைக் கோயில்.

முகப்பில், சதுரம், கட்டு, சதுரம் என்று அமைப்பில் இரண்டு முழுத் தூண்களும், இரண்டு அறைதூண்களும், வளைந்த தரங்கபோதிகைகளும், உத்திரம், வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் போன்ற பிரஸ்தர உறுப்புளும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கபோதத்திற்கு மேல் உள்ள பகுதியில் சிறு சிறு குழிகள் பந்தல் போடுவதற்காக வெட்டப்பட்டு பாதியில் விடப்பட்டுள்ளது.

கருவறை முகப்பில் இருபுறமும் பல்லவர்கால துவாரபாலகர்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே பின்சுவரில் சோமாஸ்கந்தர் உருவம் புடைப்புச் சிற்பமாகக் குடையப்பட்டுள்ளது. கருவறையின் மத்தியில் ஒரு குழி அமைக்கப்பட்டு அதில் 16 பட்டைகளுடன் அமைத்த இலிங்கமொன்று பொருதப்பட்டுள்ளது.

குடைவரையின் இடது மற்றும் வலதுபுறப் பக்கச் சுவர்களில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. வலப்புறம் 17 வரிகளடங்கிய 7 செய்யுட்களைக் கொண்ட பல்லவ கிரந்தக் கல்வெட்டும், இடது புறம் 16 வரிகளடங்கிய 6 செய்யுட்களைக் கொண்ட தேவநாகரிக் கல்வெட்டும் அமைந்துள்ளன. எழுத்துக்கள் இரண்டு வகையான போதிலும், இரண்டிலும் உள்ள செய்யுட்கள் ஒன்றுதான். கல்வெட்டுகள் மூலம் “அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹம்” என்ற இக்குடைவரை அழைக்கப்பட்டுள்ளது. இராஜசிம்மனின் விருதுப் பெயரான அதிரணசண்ட (அதி – மிகை, ரண – போர்களம், சண்ட – வல்லவன்) என்ற இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிரணசண்டன் என்று ராஜசிம்மனின் பட்டபெயர் வருவதால் இது ராஜசசிம்மன் காலத்தில் குடையப்பெற்றது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கோயில் முன்புறமுள்ள தரைபாகத்தில் முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டில், அதிரணசண்டேச்சுரத்து மகாதேவர் கோயிலுக்கு நொந்தா விளக்கு எரிக்க 90 சாவா மூவாப் பேராடுகள் தானமாக கொடுக்கப்பட்ட செய்தி வடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இவ்வூர் ஆமூர் கோட்டத்து ஆமூர் நாட்டு, திருவிழிச்சில் என்று குறிப்பு வடிக்கப்பட்டுள்ளது. ஆகவே திருவிழிச்சில் என்று முற்காலத்தில் இவ்விடம் அழைக்கப்பெற்று இன்று சாளுவன்குப்பம் என்று மறுவியுள்ளது

இக்கோயிலுக்கு முன்புறம் உள்ள ஒரு பாறையில், புடைப்புச் சிற்பமாக கொற்றவை மகிஷாசுரனுடன் போரிடும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது.

இத்தனை வரலாற்று சிறப்பு மிக்க இக்குடைவரை மக்களால் அதிகம் அறியப்படாமல் உள்ளது.

Durga as Mahishasuramardini
Durga as Mahishasuramardini, Atiranachanda Cave Temple

Atiranachanda Cave Temple

Saluvankuppam, Mahabalipuram | Mamallapuram


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


On the way from Chennai to Mamallapuram, Atiranachanda Cave temple is 200 meters north of the Tiger Cave. This Athiranachanda mandapam – Rock cut temple is dedicated to Lord Shiva. The pillars and pilasters are simple designs without many carvings. In the Artha mandapam, relief of two Somaskanda of the latter Pallava Period is available, whereas the original mandapa is of the 8th century Pallava Period. In the middle of the sanctum, there is a Taralingam with 16 stripes. The back wall of the sanctum sanctorum is carved with a beautiful Somaskandar sculpture. In front of the sanctum sanctorum are the statues of two Dwarapalakas.

Atiranachanda Cave Temple
Photograph of an unidentified cave temple at Mamallapuram, Tamil Nadu, from the Archaeological Survey of India Collections taken by Alexander Rea in the 1880s.

There are four inscriptions found in this cave temple. The Pallava Grantha inscription is located on the South wall and the North side with Devanagari (the oldest inscription found in south India). Though the languages are different, both give the same meaning. Two small label inscriptions are located at the entrance of the cave. The Two big inscriptions share a few titles, such as Atyantakama, Srinidhi, Sribhara, Ranajaya and Kamaraga. Based on this, the Scholars believe Pallava king Narasimhavarman II Rajasimha built this Atiranachanda Cave Temple. RajaRaja Chola-I period inscription carries the donation information provided to this temple. It records the gift of 90 goats for a perpetual lamp in the temple. And in this inscription, this place is mentioned as Tiruvizhichchal.


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici


Chithiram Pesuthada