கடற்கரைக் கோயிலுக்குத் தெற்கில் சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த சிறிய படைப்பு.
இங்குள்ள சிறிய புலிக்குகை அதன் முன்னோடியான சாளுவக் குப்பத்தின் புலிக்குகையை நினைவூட்டுகிறது. மூலத்தைப் போல சிறப்பு இல்லாததற்குக் காரணம், யாளிகள் முதலான சிற்பங்கள் இங்கு அதிகம் இல்லை.
சற்றே பெரிய பாறை ஒன்றில் சிறிய கொற்றவை கோயில், ஒரு சிங்க உருவத்தின் மார்பில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்பகுதியில் புலிக்குகையில் காண்பதுபோல தெய்வ உருவைத் தன்மீது கொண்டுள்ள ஒரு யானை வடிவம் உள்ளது. அதன் அருகே ஓடும் குதிரை ஒன்றையும் காணலாம்.
இவ்விரு பாறைகளின் இடையில் சிறுபாறை ஒன்று, அமர்ந்திருக்கும் சிங்க உருவாக வடிக்கப்பட்டுள்ளது.
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici