எழில்மிகு தாராலிங்கம்!

airavathiswarar

16 பட்டை கொண்ட தாராலிங்கம்,
ஐராவதேசர் கோவில் / ஐராவதேசம், காஞ்சிபுரம்

பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் கூறுவர்.

சிவலிங்கங்கள் பலவிதங்கள் உள்ளது போல், சிவலிங்கத்தின் உள்ள பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை “தாராலிங்கம்’ என்று கூறப்படுகின்றன.

சிற்பசாஸ்திரம் இவ்வகையான தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகிறது. அவை 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் அதாவது தாரைகள் அமைத்திருக்கப்படும்.

4 பட்டைகள் கொண்ட லிங்கங்களை ‘வேதலிங்கம்‘ என்றும், 8 பட்டைகள் கொண்ட “அஷ்டதாரா லிங்கம்” என்றும், 16 பட்டைகள் கொண்ட லிங்கம் “சோடச தாராலிங்கம்” என்றும், 64 பட்டைகளுடன் திகழும் அபூர்வ லிங்கத்தை “யோகினி லிங்கம்” என்று கூறுகின்றது.


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici


Chithiram Pesuthada