நடவாவி கிணறு | காஞ்சிபுரம் வரதராஜர்
ரொம்ப நாட்களுக்கு அப்புறம் திரும்பவும் இந்த நடவாவி கிணறுக்கு வந்திருக்கேன். காரணம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் நடவாவி உற்சவம்.
நடவாவி கிணற்றை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த பதிவை, மறக்காம பாருங்க. https://chithirampesuthada.com/kanchipuram/ayyangarkulam-nadavai-kinaru/ | https://youtu.be/HSCbW0r-nZk
நடவாவி உற்சவம் வருடா வருடம் சித்ரா பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் ஒரு அழகிய திருவிழா. யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் வரதருக்கு அபிஷேகம் செய்யப்படுவதே இந்த நடவாவி உற்சவத்தின் சிறப்பு.
சித்ரா பௌர்ணமிக்கு முதல் நாள், வரதர் கோவிலில் இருந்து புறப்பட்டு. பிறகு செவிலிமேடு, அப்துல்லாபுரம், துாசி, வாகை ஆகிய பகுதிகளில் பெருமாளுக்கு மண்டகப்படி நடக்கப்பட்டு. சித்ரா பவுர்ணமி அன்று, மாலை, அய்யங்கார்குளம் கிராமம் சென்றடைவார். அங்கு, வீதியுலா முடிந்து, சஞ்சீவராயர் கோவிலை சென்றடைந்து வரதருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, பிறகு இந்த உற்சவத்திற்கு முக்கியமாக பார்க்கப்டுகின்ற நடவாவி கிணற்றில் நெய்வேத்தியம் படைக்கப்பட்டு. அதன் பின்பு பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள அகழி போன்ற அமைப்பின் இடையின் அமைந்துள்ள மேடை போன்ற அமைப்பில், திருமஞ்சனம் செய்யப்பட்டு, மக்களுக்கு அழகாக காட்சி தருகிறார் வரதர். இதற்கு ஊறல் உற்சவம் என்று பெயர். பிறகு வேதாந்த தேசிகர் கோவிலுக்கு சென்று, இறுதியாக தனது ஆலயத்திற்கு சென்றடைவார்.
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் இந்த நடவாவி கிணற்றுல அப்படி என்ன சிறப்பு. இந்த நடவாவி கிணற்றை சுற்றி வறட்சியாக காணப்பட்டாலும் நடவாவி கிணற்றில் உள்ள நீர் செழித்து இருந்தது தான் சரித்திரம். இந்த உற்சவத்திற்காக மட்டுமே பௌர்ணமி இரு தினத்திற்கு முன்பு நீர் வெளிய எடுக்கப்பட்டு, பூமிக்கு அடியில் உள்ள 12 கால் மண்டபம் சுத்தம் செய்யப்பட்டு, பிறகு வரதரின் வருகைக்காக அலங்கரிக்கப்படுகிறது.
இந்த தூண்களோட அமைப்பை வைத்தே இது விஜயநகர காலத்திய கட்டுமானம் என்று நாம் புரிந்து கொள்ள முடியும். தூண்களில் திரும்பிய பக்கமெல்லாம் சிற்பங்கள். அதுபோக இந்த மண்டபத்திற்கு இடையில் அமைக்கப்பட்டிருக்கும் கிணற்றில் ஒரு வழி போன்ற அமைப்பு இருக்கு. இது கீழே இன்னொரு மண்டபம் இருப்பதற்கான சான்று.
வரதர் நடவாவி கிணற்றுக்குள் வரும் பொழுது கிணற்றை மூன்று முறை சுற்றி வரும் பொழுது, ஒரு சுற்றுக்கு நான்கு திசைக்கும் ஒரு முறை தீபாராதனை செய்து, அவருக்கு 12 வகையான பிரசாதங்களை நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
Nadavavi Utsavam | Nadapa Kinaru | Kanchi Varadar Nadavavi Utsavam
On an Auspicious day called Chitra Pournami, Kanchipuram, Sri Varadaraja Perumal Nadavavi Urchavam at Ayyangarkulam was celebrated.
A festival associated with Sri Sanjeevi Rayar temple is the famous Ayyangarkulam Nadavavi Utsavam. And this is celebrated on the full moon day (Chitra Pournami) in Chithirai when Kanchipuram Sri Varadaraja Perumal visits the Nadavavi Kinaru (Nadavai) situated on the north side of the Sanjeevi Rayar temple. This Nadavavi Utsavam is one of the important festivals conducted with grandness.
For more details about the Nadavavi StepWell / Nadavai Kinaru, visit https://youtu.be/HSCbW0r-nZk.