கதை சொல்லும் சிற்பங்கள்! கரி உரித்த சிவன்!

Gajasurasamhara

சிவபெருமானின் 64 வடிவங்களில் கஜாசுர சம்ஹாரர் என்ற வடிவமும் ஒன்று. கஜசம்ஹார மூர்த்தி என்றும் கரிஉரித்த சிவன் என்றும் கூறுவது உண்டு.

பிரம்மனிடம் தவம்பூண்டு பெற்ற வரத்தினை வைத்து தேவர்களை வதைக்கிறான் #கஜாசுரன் என்ற அசுரன். முனிவர்களும், தேவர்களும் சிவனிடம் வேண்ட, யானை முகமுடைய ககஜாசுரனை வதம் செய்து தோலை உரித்துப் போர்த்துக்கொண்டு தாண்டவமாடி அகோரமாய் நின்றார் சிவபெருமான். இந்த வடிவத்திற்கு கஜயுத்த மூர்த்தி என்றும் பெயரும் உண்டு.

கஜசம்ஹாரத்திற்கு இன்னுமொரு விதமாகவும் விளக்கம் உள்ளது, அதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

அமைவிடம்: கிபி 8ஆம் நூற்றாண்டு சேர்ந்த புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுள் ஒருவரான இராசசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னவன் காலத்தில் கட்டப்பெற்ற ஒரு அழகான கற்றளி இந்த இறவாஸ்தானம். காஞ்சிபுரத்தில் உள்ள தொண்மையான கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாக கருதப்படுகிறது. ம்ருத்திஞ்ஜயேஸ்வர் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. பல்லவ மற்றும் சோழர் கலைகளில் இந்த சிற்பம் மிகவும் பிரபலமானது.


Gajasurasamhara | Gajasamhara | Gajantaka | Matangari

One of the 64 forms of Lord Shiva is Gajasurasamhara, also known as Gajasamhara, “The Slayer of the elephant demon”, an intense character of the Hindu god Shiva the Destroyer of the elephant demon, Gajasura. The idol is famous in Pallava and Chola art, which depict him dancing energetically in the skinned elephant hide of Gajasura.

Iravasthanam | இறவாத்தானம் | Sri Miruthinja Eswarar, Kanchipuram, Kanchipuram District, Tamil Nadu.

YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/

Chithiram Pesuthada