மருத்துவமனையாக செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோவில்

thirumukkudal appan venkatesa perumal temple

1000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கோவில் மருத்துவமனையா செயல்பட்டதுனு சொன்ன நம்புவீங்களா. அப்படி ஒரு இடம்தான் இன்றைக்கு பார்க்கப்போகிறோம்.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு செல்லும் சாலையில், பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருமுக்கூடல் எனும் ஊரில் அமைந்துள்ளது அப்பன் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோவில். வேகவதி ஆறு, செய்யாறு, பாலாறு ஆகிய மூன்று ஆறுகளும் இங்கே சங்கமிப்பதால் முக்கூடல் என்று பெயர் பெற்று பின்பு திருமுக்கூடல் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 

கோவில் வெளிப்புறம் சாதாரணமாக தெரிந்தாலும், மொட்டை கோபுரம் கடந்து உள்ளே சென்றால் கண்களுக்கு பிரமாண்டமாய் காட்சியளிக்கின்றது இந்த கற்றளி. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் என இரண்டு திருச்சுற்றுகளோடு அமைந்துள்ள இக்கோவிலின் முன்புறத்தில் காஞ்சி வரதர் மண்டபம், சொர்க்க வாசல், ஊஞ்சல் மண்டபம், வாகன மண்டபம் என திரும்பிய பக்கமெல்லாம் மண்டபங்கள். 6 அங்கத்தோடு அமைக்கப்பெற்ற கருவறை அமைப்பானது பிரஸ்தரம் வரை கருங்கல்லாலும், அதன் மேலுள்ள விமானம் நீள்சதுரமாக அமைக்க பெற்று சுதையினால் கட்டப்பெற்றுள்ளது. 

கோவில் கட்டிடக்கலை சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்பட்டாலும், இங்கே பல்லவ மன்னனான நிற்பதுங்க வர்மன் காலத்திய கல்வெட்டு கிடைப்பதால், இக்கற்றளி பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பெற்று, பின்பு சோழர் ஆட்சி காலத்தில் மறுசீரமைக்கப்பட்டு, விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் பெற்றதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வடக்கு நோக்கி கருவறை அமைக்கப்பட்டாலும், மேற்கு நோக்கி பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளது. இதை கடந்து உள்ளே சென்றால் கோவிலின் மகாமண்டபத்தில் பல்லவர் காலத்திய சிம்ம தூண்கள் காணப்படுகிறது. சிம்ம தூண்களை தவிர மற்ற தூண்கள் அனைத்தும் உருள் வடிவ தூண்களாக உள்ளது. அதில் ஒன்றில் புடைப்புச்சிற்பமாக வேணுகோபாலர் காணப்படுகிறார்.

மகா மண்டபம் ஒட்டி அமைந்த முதலாம் திருச்சுற்றின் வாயில் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். குறைந்தது 6 அடி உயரமாவது இருக்கும். துவாரபாலகருக்கு நேர் எதிரே கருடர் காணப்படுகிறார். முதலாம் திருச்சுற்று கடந்து உள்ளே சென்றால் அப்பன் வெங்கடேச பெருமாள் முமூர்த்தியின் வடிவமாக காட்சி அளிக்கிறார்.

கருவறை சுற்றி அமைக்கப்பட்டுள்ள திருச்சுற்று, மண்டபம் போல் காட்சி அளிப்பதால் இதை “திருமாளிகைபத்தி” என்று கூறுவர். மின்விளக்கு இருக்கும் பொழுதே இருள் சூழ்ந்து இருக்கு. அப்போ முற்காலத்தில் எப்படி இந்த இடம் இருந்திருக்கும் நினைத்துப்பாருங்கள். சூரிய வெளிச்சம் உள்ளே வர நான்கு மூலைகளிலும் மேற்கூரையில் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை சுற்றி விஷ்ணுவின் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் தெற்கு நோக்கி அமைந்த திருமேனி பார்க்க பரமபத நாதர் போன்று தெரிகின்றது. அதுபோக தென் கிழக்காக ஆழ்வார்களின் திருஉருவ சிலைகளும், நாராயணர், அனுமன், கருடரின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய ஒரு தனிச்சன்னதியில் அலர்மேல் மங்கை தாயார் காணப்படுகிறாள். 

அடுத்ததாக இரண்டாம் திருச்சுற்றில் அமைந்துள்ள சன்னதிகளை பாப்போம். தென்மேற்கில் சுந்தரவல்லி தாயார் சன்னதி காணப்படுகிறது. பரிவரக்கோவிலாகவும் இச்சன்னதி காணப்படுகிறது. வடமேற்கில் கரியமாணிக்கப் பெருமாள் சன்னதி காணப்படுகிறது.கோவிலின் சுவரில் கோட்டங்கள் வெறுமையாக காணப்படுகிறது. வடகிழக்காக அனுமன் | வீர ஆஞ்சநேயர் ஒரு தனி சன்னதியில் காணப்படுகிறார். 

கல்வெட்டுகள் இறைவனை நிற்பதுங்க வர்மன் ஆட்சி காலத்தில் “விஷ்ணு படாரர்” என்றும், சோழர் காலத்தில் “திருமுக்கூடல் ஆழ்வார்” என்றும், விஜயநகர மன்னர்கள் காலத்தில் ‘திருவேங்கடமுடையான்‘ என்றும், செஞ்சி நாயக்க மன்னர்கள் காலத்தில் “வெங்கடேசுவர சுவாமி” என்றும் கூறுகின்றது.

அதுபோக கல்வெட்டுகள் இவ்வூரை “ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து களத்தூர்க்கோட்டத்து தனியூர் ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்து வடபிடாகை திருமுக்கூடல்” என்று கூறுகின்றது. கல்வெட்டுகள் இறைவனுக்கு கொடுத்த தானங்கள் பற்றி கூறுகின்றது. அதில் முக்கியமா பார்க்கப்டுகின்ற வீரராஜேந்திரன் காலத்திய கல்வெட் டில் கோவில் நிர்வாகம் பற்றியும், வேத கல்லூரி, உணவு விடுதி, மாணவர் தங்கும் விடுதி, ஆதுலர் சாலை என்கின்ற மருதவச்சாலை பற்றியும் கூறுகின்றது.

15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இக்கோவிலின் ஒரு பகுதி செயல்பட்டுள்ளது. அதில் நாடி பார்த்து மருத்துவம் பார்ப்பவர், அறுவை சிகிச்சை செய்பவர், செவிலியர், நீரும், மருந்தும் கொண்டுவருபவர், மருந்தின் பெயர்கள், மருந்தை பாதுகாப்பு செய்வதை பற்றியும் கல்வெட்டுகள் கூறுகின்றது.

சோழர் கால மருத்துவமனை பற்றி கூறும் கல்வெட்டுகள் வெகு சிலவே, அதில் திருமுக்கூடலும் ஒன்றாக கருதப்படுகின்றது. ஆயிரம் ஆண்டுகள் முன்பே நம் முன்னோராகள் எத்தகைய திறன் படைத்தவர்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறது இக்கல்வெட்டுகள். மனதிற்கு அமைதி தரக்கூடிய இவ்விடம் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு பொக்கிஷம். நேரம் கிடைத்தால் நேரில் சென்று காணுங்கள், நன்றி, வணக்கம்.


Thirumukkudal Appan Venkatesa Perumal

Appan Venkatesa Perumal Temple | திருமுக்கூடல் ஸ்ரீஅப்பன் வெங்கடேசப் பெருமாள் கோவில்
Thirumukkudal, Kanchipuram District, Tamil Nadu.

God: Sri Appan Venkatesa Perumal | Vishnu Padarar | Thirumukkudal Alwar | Thirumukkudal Vishnu | Thiruvenkadamudayan | Sri Venkateswara Swamy
Goddesses: Sri Alamelu Mangai
Location: https://goo.gl/maps/dkVBhbX4STtWzDL86


A beautiful small village called Thirumukkudal is named after the Palar, Cheyyaru, and Vegavathi river that converges here. An ancient Chola temple, “Appan Venkatesa Perumal Temple”, resides on the south side of the river bank. The Archaeological Survey of India ( ASI ) maintains this Appan Venkatesa Perumal Temple. The north-facing Temple has a beautiful Mottai Gopuram facing east. In the outer Prakara Kanchi Varadhar Mandapa, Sorka Vaasal, Vahana mandapa, Veera Anjaneya Sannadhi, Vahana mandapa, Madapalli, Sundaravalli Thayar Sannadhi and Kariyamanicka Perumal sannadhi. Both Sundaravalli Thayar Sannadhi Kariyamanicka Perumal sannadhi were built without Vimana.

Temple Architecture:
Though the architecture resembles the Chola period style, scholars believe this Temple might have been built during the Pallava period, renovated by the Chola kings, followed by the Vijayanagara. Temple has two Prakara. The Sanctum Sanctorum consists of Sanctum, Antarala, Artha Mandapa, Mukha Mandapa and Maha Mandapa. The Maha Mandapa has three nos of Pallava style squatting lion pillars. The inner Prakara was built like a mandapa and supported by Cylindrical pillars, and this was called “Thirumaligaipathi”. The Sanctum has six parts Adhisthana, Bitti, Prasthara, Grivam, Sikara and Kalasam, and the Sanctum is rectangular. Till Prasathara, the Appan Venkatesa Perumal Temple was built with Granite stones & the top portion of the vimana was built with Lime & Brick.

History:
The Temple has 22 inscriptions recorded in 1915AD by the Archaeological Survey of India ( ASI ). The inscriptions belongs to Pallava king Nrupatunga Varman, Rajaraja Chola – I, Rajendra Chola – I, Virarajendra Chola, Kulothunga Chola – I, Vikrama Cholha, Vijayanagara King Veerapukkana Udayar, Poobana Udayar and Senji Nayakas. The inscriptions primarily speak about donations of Gold, land, Gold, Money, Goats for burning Perpetual lamps, Naivedyam, etc. And in that, the Veera Rajendran period inscription is considered an important one. This inscription record a 15-bed hospital (athura-salai) and a Vedic College with a hostel for the 60 students to stay in. The number of students enlisted, the teachers for each subject, and the daily wages is documented in the inscriptions. This hospital had nurses, physicians, and servants who fetched medicinal herbs, including a surgeon named Kodandaraman Ashvathaman-Bhattan, who performed operations in the hospital. And also, in the inscriptions, The name of 20 Ayurvedic medicines were documented. 


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici

Chithiram Pesuthada