தமிழகத்தின் முதல் ஆடலரசன் சிற்பம் பெற்ற சீயமங்கலம் குடைவரைக் கோயில்!
சீயமங்கலம், சிம்மமங்கலம் என்று பல்லவர் காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூரில், குடைவரைக் கோயில் ஒன்றை அமைத்து அழகு பார்த்தான் மகேந்திரவர்மன். 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரைக் கோயிலின் எதிராக வலது புறம் அமைந்துள்ள மிகப் பெரிய ஏரியும் அதன் நடுவில் ஆங்காங்கே செங்குத்தான தூண்களைப் போன்ற பாறைகளும் இயற்கை அழகுடன் அமைந்துள்ளன. இயற்கையாக அமைந்துள்ள இத்தூண் அமைப்புகளால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஈசனுக்கு ‘தூணாண்டார்‘ என்றும் ‘ஸ்தம்பேஸ்வரர்‘ என்றும் அழைக்கப்பட்டுள்ளார். இங்குள்ள கல்வெட்டு இக்குடைவரைக் கோயிலை “அவனிபாஜன பல்லவேஸ்வரம்” எனக் கூறுகிறது….
