நடுநாட்டில் சோழர் கால பொக்கிஷம்! – வேதபுரீசுவரர் கோயில், ஏமப்பூர்
ஏமப்பூர் என்று தற்பொழுது வழங்கும் இவ்வூர் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூருக்கு வடக்கே மலட்டாற்றின் வடகரையிலும், பெண்ணையாற்றின் தென்கரையிலும் அமைந்துள்ளது. ஏமப்பேரூர் ஒரு தனி நாடாக விளங்கி உள்ளது. இது ராஜேந்திர சிம்ம வளநாட்டு திருமுனைப்பாடியின் ஒருபகுதியாகும். கோயில் கோட்டத்தில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் சோழர்கால கலைத்திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. பிட்ச்சாடனர், தட்சிணாமுர்த்தி, ரிஷபத்துடன் உமாசகித மூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோர் உள்ளனர். இதில் உமாசகிதர், பிட்ச்சாடனரின் சிற்பம் அழகின் உச்சம். கருவறை முகப்பில் பால கணபதியின்…
