அமர்ந்த கோலத்தில் மகாவிஷ்ணு!

தக்கோலம் ஜலநாதேஸ்வரர் கோவில் கருவறையின் பின்புற கோட்டத்தில் “மகாவிஷ்ணு” வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு சுகாசன கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவின் கையில் உள்ள சக்கரம், பிரயோகச் சக்கரமாக வடிவில் பார்க்க முடிகின்றது. இது கோவிலின் பழமையை குறிக்கின்றது.பல்லவர் காலத்தில் கட்டப்பெற்று, பின்பு சோழ மன்னர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் விரிவிவாக்கம் செய்யப்பெற்றது. இடம்: திருவூறல் – தக்கோலம் YouTube: https://www.youtube.com/c/chithirampesuthadaFacebook: https://www.facebook.com/chithirampesuthadasureshInstagram: https://www.instagram.com/chithirampesuthada/Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/Web: https://chithirampesuthada.com/

அபூர்வ கோலத்தில் தெக்கணமூர்த்தி!

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) தலையை சற்றே சாய்த்து பார்க்கும் அழகு வேறெங்கும் காணமுடியாது அபூர்வ கோலம். இந்த ஆசனம் மனதைக் கட்டுப்படுத்துவதாகும். தமது வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக் காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார் தெக்கணமூர்த்தி. காலடியில் முயலகன் இல்லை. வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில்…

எழில்மிகு தர்மதாரா லிங்கம்!

முப்பத்திரண்டு(32) பட்டைகளுடன் காட்சி தரும் பல்லவர் கால எழில்மிகு தர்மதாரா லிங்கம். 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. சிற்ப சாஸ்திரத்தின் விதிப்படி, தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகிறது. அதாவது 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் /தாரைகள் அமைக்கப்பட்டிருக்கும். இடம்: ராமேஷ்வரர் லட்சுமனேஷ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் Beautiful Dharmadara Linga! Thirty-two (32) striped Pallava period Dharmadara Linga and the scholars believe…

உமை அம்மை இறைவனை வழிபட்ட தளம்!

கங்கணேசுவரர் கோவில், காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும், இன்னும் பல கோவில்கள் மக்களுக்கு தென்படாமல் இருப்பது ஆச்சர்யம் தான். அப்படிப்பட்ட ஒரு கோவில்தான் இந்த கங்கணேசம் என்று அழைக்கப்படுகின்ற கங்கணேசுவரர் கோவில். காஞ்சி புராணத்தில் இக்கோவிலை பற்றி கூறப்பட்டுள்ளது. இங்கே இறைவனை உமை அம்மை வழிபட்டதாக கூறப்படுகிறது. அதுபோக இங்கே நின்ற நிலையில் காணப்படும் விநாயகரின் சிலையை பார்க்க இரு கண்கள் போறாது. Although there are many temples in Kanchipuram, it is…

யார் இந்த கொற்றவை? போர் தெய்வமாக அறியப்பட்டவளா?

Kotravai | Goddess Durga சிறுமணவூர், நிரஞ்சீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள தனிப்பலகை சிற்பமாக 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை காணப்படுகிறாள். சங்க இலக்கியங்களில் பாய் கலை பாவை என்று குறிப்பிடும் இவடிவத்தில் மான் வாகனத்துடன், அக்னி கிரீடம் பூண்டு, கரங்களில் கத்தி, வில், திரிசூலம், கேடயம், அம்பு, சங்கு, சக்கரம் போன்ற ஆயுதங்களை தாங்கி, கிளியுடன் காணப்படும் இவ்வன துர்க்கையின் பாதத்தின் அருகே நவகண்டம் கொடுக்க தயார் நிலையில் உள்ள வீரன் காணப்படுகிறான். Kotravai (Korrawai), also spelt Korravai…

செந்நிறத்தில் ஜொலிக்கும் ஒரு அழகான பொக்கிஷம்!

இன்று திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சி கரூர் செல்லும் சாலையில் காவிரிக்கரையின் மேல் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ள இந்தக் கற்கோவில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து திருச்செந்துறை “மானேந்தியவல்லி உடனுறை சந்திரசேகர சுவாமி திருக்கோவிலை”-த்தான் இன்று பார்க்கப் போகிறோம்! முதலாம் பராந்தகச் சோழனின் மருமகளும், அரிகுல கேசரியின் மனைவியான இருக்குவேளிர் குலத்தேவியான “பூதி ஆதித்த பிடாரி” என்னும் சோழப் பேரரசியால் இக்கற்றளி கட்டமைக்கப்பட்டது. கிழக்கு நோக்கி அமைந்த இக்கோவில், ஐந்தடுக்கு ராஜகோபுரத்தில் உள்ள சுதை…

சிவராத்திரிக்கு மட்டுமே திறக்கப்படும் அதிசய கோவில்!

பிறவாதீஸ்வரர் கோவில் | பிறவாதீசுவரர் | பிறவாத்தானேசுவரர் | பிறவாத்தானம் மேற்கு நோக்கி அமைந்துள்ள பிறவாதீசுவரர் கோவிலானது, மக்களால் அதிகம் அறியப்படாத ஒரு கலை பொக்கிஷம். காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் இக்கோவிலைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இராசசிம்மன் என்று அழைக்கப்பெற்ற இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னரால் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றது. இக்கோவில் இராசசிம்மன்னனால் கைலாசநாதர் கோவிலுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் கட்டிய முதல் கோவில். Piravadeeswarar Temple | Piravasthanam | Priravadeeswarar Temple | பிறவாதீசுவரர் | பிறவாத்தானம்…

Chithiram Pesuthada