தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – வலையன்குட்டை ரதம்!

மாமல்லப்புரத்தின் எல்லைப் பகுதியில் வலையன்குட்டை அருகே அமைந்துள்ளது இந்த வலையன்குட்டை ரதம், இதனால் அதன் பெயரிடப்பட்டது என்று புலனாகிறது. பிடாரி ரதத்திற்கு தெற்கில் காணப்படும், இந்த ஒற்றைக் கல் ரதமானது வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் எழில் மிகுந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. சதுரமான நாகரி சிகரத்தை கொன்டு, இரண்டு அடுக்கு விமானமாக குடையப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய இந்த ஒற்றைக்கல் தலியானது, முகப்பில் முக மண்டபமும் அதனுடன் கருவறையும் அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபத்தின் நுழைவாயில் இரண்டு தூண்கள் மற்றும் இரண்டு அரை…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – பிடாரி ரதங்கள்!

இந்த ஒற்றைக் கல் ரதமானது பக்கிங்காம் கால்வாய்க்கு கிழக்குப் பக்கத்தில், பிடாரி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ளது, இதனால் அதன் பெயரிடப்பட்டது என்று புலனாகிறது. இங்கே இரண்டு ரதங்கள் அருகருகே கம்பீரமாக குடைவிக்கப்பட்டுள்ளது. எந்தவித சிற்பங்களின்றி குடையப்பட்டுள்ளதால் எந்த தெய்வத்திற்காக எழுப்பப்பட்டது என்று அறிய முடியவில்லை. இந்த இரண்டு ரதங்களும் விமானத்தின் மேல்பகுதி – பிரஸ்தரம் வரை செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பகுதியான சுவர் மட்டும் அதிட்டான பகுதி ஆரம்ப நிலையிலே உள்ளது. இரண்டு ரதங்களும் இரண்டு…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – கொடிக்கால் மண்டபம்!

மும்மூர்த்தி குகையிலிருந்து மேற்கு நோக்கிச் சிறிது தூரம் சென்றால் ஒரே அறையுடன் கூடிய குகைக் கோயில் குடைவித்துள்ளதைக் காணலாம். கருவறை எந்த கடவுளரும் இல்லாமல் வெறுமையாய் காணப்பட்டாலும் இருபுறம் பெண் துவாரபாலர்கள் இருப்பதால் இது கொற்றவைக்காக அமைக்கப்பட்ட கோயில் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். நீண்ட சதுரமான அமைப்புடைய இக்குடவரை கோயிலுள்ள பெண் துவாரபாலர்கள் இருவரும், மெலிந்து, வசீகரமான தோற்றத்துடன் காணப்படுகின்றனர். தென்புறமுள்ள பெண், வலது கையில் வில்லைப் பிடித்து நிற்கிறாள். வடபுறமுள்ள பெண், வலது கையில் கத்தியுடனும்…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – சிறிய புலிக்குகை!

கடற்கரைக் கோயிலுக்குத் தெற்கில் சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த சிறிய படைப்பு. இங்குள்ள சிறிய புலிக்குகை அதன் முன்னோடியான சாளுவக் குப்பத்தின் புலிக்குகையை நினைவூட்டுகிறது. மூலத்தைப் போல சிறப்பு இல்லாததற்குக் காரணம், யாளிகள் முதலான சிற்பங்கள் இங்கு அதிகம் இல்லை. சற்றே பெரிய பாறை ஒன்றில் சிறிய கொற்றவை கோயில், ஒரு சிங்க உருவத்தின் மார்பில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்பகுதியில் புலிக்குகையில் காண்பதுபோல தெய்வ உருவைத் தன்மீது கொண்டுள்ள ஒரு யானை வடிவம் உள்ளது….

அதிகம் அறியப்படாத சமண தலம்!

ஓணம்பாக்கம் எனும் இவ்வூரானது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த ஓணம்பாக்கம் 1200 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது மற்றும் 8 ஆம் நூற்றாண்டில் ஒரு ஜெயின் மையமாக இருந்தது. குறத்திமலை, கூசாமலை, பட்டிமலை, மற்றும் வெண்மணிமலை என நான்கு குன்றுகளை மக்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், திரும்பிய பக்கமெல்லாம் குவாரியின் தாக்கத்தால் அடையாளம் காண முடியவில்லை, மேலும், அடையாள பலகை இல்லாததால், சவாலாக உள்ளது. இந்த தளத்தை…

சூரியன் வழிபட்ட பதங்கிஸ்வரர் ஆலயம்!

அருள்மிகு பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பாலாற்றங்கரையில் வடக்கு புறத்தில், கிழக்கு நோக்கி அமைந்த பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பெற்றது. பின்பு வந்த சோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. முகமண்டபம் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டடுக்கு விமானத்துடன், பாதபந்த அதிட்டானத்துடன் கட்டப்பெற்றுள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து உற்றுர் கோட்டத்து பெரும்பலையூர் நாட்டு பெரும்பலையூர் என்றும் ராஜேந்திர சோழ நல்லூர் என்றும் அழைக்கப்பெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றது. முதலாம் பராந்தக சோழன், முதலாம் குலோத்துங்க…

Chithiram Pesuthada