மருத்துவமனையாக செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோவில்
1000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கோவில் மருத்துவமனையா செயல்பட்டதுனு சொன்ன நம்புவீங்களா. அப்படி ஒரு இடம்தான் இன்றைக்கு பார்க்கப்போகிறோம். காஞ்சிபுரம் செங்கல்பட்டு செல்லும் சாலையில், பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருமுக்கூடல் எனும் ஊரில் அமைந்துள்ளது அப்பன் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோவில். வேகவதி ஆறு, செய்யாறு, பாலாறு ஆகிய மூன்று ஆறுகளும் இங்கே சங்கமிப்பதால் முக்கூடல் என்று பெயர் பெற்று பின்பு திருமுக்கூடல் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கோவில் வெளிப்புறம் சாதாரணமாக தெரிந்தாலும், மொட்டை கோபுரம்…