அபூர்வ கோலத்தில் தெக்கணமூர்த்தி!

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) தலையை சற்றே சாய்த்து பார்க்கும் அழகு வேறெங்கும் காணமுடியாது அபூர்வ கோலம். இந்த ஆசனம் மனதைக் கட்டுப்படுத்துவதாகும். தமது வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக் காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார் தெக்கணமூர்த்தி. காலடியில் முயலகன் இல்லை. வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில்…

செந்நிறத்தில் ஜொலிக்கும் ஒரு அழகான பொக்கிஷம்!

இன்று திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சி கரூர் செல்லும் சாலையில் காவிரிக்கரையின் மேல் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ள இந்தக் கற்கோவில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து திருச்செந்துறை “மானேந்தியவல்லி உடனுறை சந்திரசேகர சுவாமி திருக்கோவிலை”-த்தான் இன்று பார்க்கப் போகிறோம்! முதலாம் பராந்தகச் சோழனின் மருமகளும், அரிகுல கேசரியின் மனைவியான இருக்குவேளிர் குலத்தேவியான “பூதி ஆதித்த பிடாரி” என்னும் சோழப் பேரரசியால் இக்கற்றளி கட்டமைக்கப்பட்டது. கிழக்கு நோக்கி அமைந்த இக்கோவில், ஐந்தடுக்கு ராஜகோபுரத்தில் உள்ள சுதை…

Chithiram Pesuthada