தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – சிறிய புலிக்குகை!

கடற்கரைக் கோயிலுக்குத் தெற்கில் சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த சிறிய படைப்பு. இங்குள்ள சிறிய புலிக்குகை அதன் முன்னோடியான சாளுவக் குப்பத்தின் புலிக்குகையை நினைவூட்டுகிறது. மூலத்தைப் போல சிறப்பு இல்லாததற்குக் காரணம், யாளிகள் முதலான சிற்பங்கள் இங்கு அதிகம் இல்லை. சற்றே பெரிய பாறை ஒன்றில் சிறிய கொற்றவை கோயில், ஒரு சிங்க உருவத்தின் மார்பில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்பகுதியில் புலிக்குகையில் காண்பதுபோல தெய்வ உருவைத் தன்மீது கொண்டுள்ள ஒரு யானை வடிவம் உள்ளது….

பல்லவ பேரரசின் அறிய பொக்கிஷம் – வீரட்டேசுவரர் கோயில்

பல்லவ பேரரசின் கடைசி அரசரான “அபராஜிதவர்ம பல்லவன்” ஆட்சி காலத்தில் நம்பி அப்பி என்பவர் கருங்கற்களை கொண்டு செஞ்சடைஈசர்க்குக் தூங்கானைமாட வடிவிலான இக்கோயில் கட்டியுள்ளார் என்று இக்கோயில் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. நற்கலைகள் எல்லாம் நவின்ற சீர் நம்பி அப்பி விருப்பத்துடன் இக்கோயிலை பொற்புறக் கட்டினார் என்பதைப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஒரு வெண்பா மூலம் பாடி அதனைக் கல்வெட்டாகவும் வெட்டி வைத்துள்ளான். “திருந்து திருத்தணியல் செஞ்சடை யீசர்க்குக்கருங்கல்லால் கற்றளியா நிற்க – விரும்பியேநற்கலைக ளெல்லா நவின்றசீர்…

எழில்மிகு தர்மதாரா லிங்கம்!

முப்பத்திரண்டு(32) பட்டைகளுடன் காட்சி தரும் பல்லவர் கால எழில்மிகு தர்மதாரா லிங்கம். 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. சிவலிங்கங்களில் பலவிதங்கள் உண்டு, அதில் பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வைகையான இலிங்கங்களை “தாராலிங்கம்’ என்று அழைக்கப்படுகின்றன. சிற்ப சாஸ்திரத்தின் விதிப்படி, தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகின்றது. அதாவது 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் /தாரைகள் அமைக்கப்பட்டிருக்கும். நான்கு பட்டைகள் கொண்ட…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் | அதிரணசண்ட மண்டபம்

அதிரணசண்ட குடைவரைக் கோயில்! சென்னை மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் புலிக்குகை வடபுறத்தே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதிரணசண்ட பல்லவேஸ்வர மண்டபம் என்ற பல்லவ வரலாற்றுச் சின்னம். இது ஒரு சிவன் கோயிலாகும். நீள்சதுரப் பாறையில் கிழக்கு நோக்கி அமைந்த்துள்ளது இந்த அதிரணசண்ட குடைவரைக் கோயில். முகப்பில், சதுரம், கட்டு, சதுரம் என்று அமைப்பில் இரண்டு முழுத் தூண்களும், இரண்டு அறைதூண்களும், வளைந்த தரங்கபோதிகைகளும், உத்திரம், வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் போன்ற பிரஸ்தர…

கண் பார்வை அளித்த பெருங்குடி அகத்தீஸ்வரர்!

இன்றைக்கு நாம் பார்க்க போகின்ற இக்கோயில் சுந்தர சோழன் காலத்தில கட்டப்பட்ட சிவகாமி சுந்தரி உடனுறை அகத்தீஸ்வரர் கோயில், அதுவும் கண் பார்வைக்கான தளமாக இந்த கோயில் கருதப்படுகின்றது. என்ன தம்பி திடீர் என்று புராணம் பேசுற அப்படினு உங்களுக்கு தோன்றும், இதை நான் கூறவில்லை, இக்கோயிலின் கல்வெட்டுகள் கூறுகின்றது. இக்கோயிலானது திருச்சி வயலூர் செல்கின்ற சாலையில் சுமார் 8km தொலைவில், பெருங்குடி எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. தொல்லியல் துறையும் இந்த கோவில அழகா பராமரிப்பு செய்து…

எழில்மிகு தாராலிங்கம்!

16 பட்டை கொண்ட தாராலிங்கம், ஐராவதேசர் கோவில் / ஐராவதேசம், காஞ்சிபுரம் பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் கூறுவர். சிவலிங்கங்கள் பலவிதங்கள் உள்ளது போல், சிவலிங்கத்தின் உள்ள பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை “தாராலிங்கம்’ என்று கூறப்படுகின்றன. சிற்பசாஸ்திரம் இவ்வகையான தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகிறது. அவை 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள்…

தமிழ்நாட்டின் பிரம்மாண்ட ராமர் கோவில்!

இன்றைக்கு நாம் பார்க்க போகும் இக்கோவில் தமிழ்நாட்டிலே பிரம்மாண்டமாக ராமருக்காக கட்டப்பட்ட யோக ராமர் கோவில். அதுபோக ராமர் இங்க வித்தியாசமா காட்சி தருகிறார், காணொளி முழுக்க எதையும் miss பண்ணாம பாருங்க அதுபோக நம்ம channel-அ இதுவரைக்கும் subscribe பண்ணாதவங்க subscribe பண்ணிக்கோங்க. இக்கோவிலுக்கு ராமச்சந்திர பெருமாள் கோவில் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இக்கோவிலானது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் இந்த பிரம்மாண்ட யோக ராமர் கோவில் இருக்கு. விஜயநகர மன்னர்களும்…

புதுச்சேரியில் ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோவில்

ரொம்ப நாள் கழிச்சு நம்ம இன்னைக்கு ஒரு அழகான கோவில பார்க்கப்போறோம். குண்டாங்குழி மகாதேவர் கோவில் இன்னைக்கு நாம பார்க்க போகிற இந்த கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட “திருகுண்டாங்குழி மகாதேவர் கோவில்“. இந்த கோவில் எங்க இருக்குன்னா விழுப்புரம் பாண்டிச்சேரி போகின்ற சாலையில் மதகடிப்பட்டு என்ற அமைதியான ஒரு ஊரில் தான் இருக்கு. இந்த கோவில ராஜராஜ சோழன் தான் கட்டினாரு சொல்லறத்துக்கு என்ன ஆதாரம், அதை நாம் இறுதியில் பார்க்கலாம். மேற்கு நோக்கி…

சோழர் கால கலை பெட்டகம்! குரங்கநாதர் கோவில்!

கிபி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால கட்டடக் கலையின் மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கும் ஒரு கலை பெட்டகம் இன்று காணப்போகிறோம். குரங்குநாதர் கோவில், சீனிவாசநல்லூர் திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில், முசிறி தாண்டியதும் வருவது காவேரிகரிக்கரை கிராமம் சீனிவாசநல்லூர். இங்கே இடைக்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட குரங்கநாதர் கோவில் என்று இன்று அழைக்கப்படுகின்ற திருக்குரக்குத்துறை மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் உள்ள சிற்பங்கள் ஒவொன்றும் சோழ சிற்பக்கலையின் உச்சி என்றே கூறலாம். அந்த அளவிற்கு…

தெரிந்த மகாபலிபுரம், தெரியாத இடங்கள் | மகிஷாசுரன் குகை

மாமல்லபுரம் / மகாபலிபுரம் கடற்கரை கோவிலின் வடபுறத்தே கடல் அலைகள் சூழ ஒரு பெரிய பாறையின் மேல்புறத்தில் ஒரு குடவரை கோவில் ஒன்று குடையப்பட்டுள்ளது. குடைவரையின் மத்தியில் மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படுகின்ற கொற்றைவையின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கொற்றவைக்கு இருபுறமும் சிம்மமும், துவார பாலகிகள் காணப்படுகின்றனர். Mahabalipuram | Mamallapuram | Mahishasura Cave To the north of the Mamallapuram / Mahabalipuram Shore temple is a cave temple on a rock…

Chithiram Pesuthada