9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்
9ஆம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் நான்கு வரிகள் கொண்ட கல்வெட்டும், அதன் கீழ் ஒரு வீரனின் உருவம் கொண்ட நடுகல். வீரன் தனது வலது கையை உயர்த்தி குத்துவாளை ஓங்கியவாறும், இடது கையானது முஷ்டி முத்திரையில் உள்ளது. தலைமுடி இரண்டு சுருள்கள் கொண்ட கொண்டையாக முடியப்பட்டும், அவரது இடுப்பில் மற்றொரு குறுவாளும் உள்ளது. நான்கு வரிகள் கொண்ட இக்கல்வெட்டு “கரைஞ்காட்டூர் மக்களுடன் நேர்ந்த பகைக்கு தள்ளம்பி என்பவரும், மற்றொரு வீரனும் தன்னுயிரை இழந்ததாக” குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இக்கல்வெட்டில் முதல்…