கொல்லிமலை அறப்பள்ளி ஈசுவரர் கோயில்
வரலாற்றிலும், இலக்கியத்திலும் கொல்லிமலை பற்றிய செய்தி உண்டு. உதாரணமாக, அகநானூற்றுப் பாடல் ஒன்றில், “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரிசெல்லா நல்இசை நிறுத்த வல்வில்ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்தசெவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி”~ அகநானூறு, 209என்று வருவதைப் பார்க்கலாம். “வல்வில் ஓரி” என்னும் மன்னன் ஆண்ட பகுதியும், காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் தவம் செய்ததுமான இம்மலையில் நாசிக்கு மூலிகை மணமும், கண்ணுக்கு பசுமை விருந்தளிக்கும் அறப்பள்ளி எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய அறப்பள்ளி ஈசுவரர்…