தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – வலையன்குட்டை ரதம்!

மாமல்லப்புரத்தின் எல்லைப் பகுதியில் வலையன்குட்டை அருகே அமைந்துள்ளது இந்த வலையன்குட்டை ரதம், இதனால் அதன் பெயரிடப்பட்டது என்று புலனாகிறது. பிடாரி ரதத்திற்கு தெற்கில் காணப்படும், இந்த ஒற்றைக் கல் ரதமானது வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் எழில் மிகுந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. சதுரமான நாகரி சிகரத்தை கொன்டு, இரண்டு அடுக்கு விமானமாக குடையப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய இந்த ஒற்றைக்கல் தலியானது, முகப்பில் முக மண்டபமும் அதனுடன் கருவறையும் அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபத்தின் நுழைவாயில் இரண்டு தூண்கள் மற்றும் இரண்டு அரை…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – பிடாரி ரதங்கள்!

இந்த ஒற்றைக் கல் ரதமானது பக்கிங்காம் கால்வாய்க்கு கிழக்குப் பக்கத்தில், பிடாரி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ளது, இதனால் அதன் பெயரிடப்பட்டது என்று புலனாகிறது. இங்கே இரண்டு ரதங்கள் அருகருகே கம்பீரமாக குடைவிக்கப்பட்டுள்ளது. எந்தவித சிற்பங்களின்றி குடையப்பட்டுள்ளதால் எந்த தெய்வத்திற்காக எழுப்பப்பட்டது என்று அறிய முடியவில்லை. இந்த இரண்டு ரதங்களும் விமானத்தின் மேல்பகுதி – பிரஸ்தரம் வரை செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பகுதியான சுவர் மட்டும் அதிட்டான பகுதி ஆரம்ப நிலையிலே உள்ளது. இரண்டு ரதங்களும் இரண்டு…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – கொடிக்கால் மண்டபம்!

மும்மூர்த்தி குகையிலிருந்து மேற்கு நோக்கிச் சிறிது தூரம் சென்றால் ஒரே அறையுடன் கூடிய குகைக் கோயில் குடைவித்துள்ளதைக் காணலாம். கருவறை எந்த கடவுளரும் இல்லாமல் வெறுமையாய் காணப்பட்டாலும் இருபுறம் பெண் துவாரபாலர்கள் இருப்பதால் இது கொற்றவைக்காக அமைக்கப்பட்ட கோயில் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். நீண்ட சதுரமான அமைப்புடைய இக்குடவரை கோயிலுள்ள பெண் துவாரபாலர்கள் இருவரும், மெலிந்து, வசீகரமான தோற்றத்துடன் காணப்படுகின்றனர். தென்புறமுள்ள பெண், வலது கையில் வில்லைப் பிடித்து நிற்கிறாள். வடபுறமுள்ள பெண், வலது கையில் கத்தியுடனும்…

தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – வரலாற்றுப் பயணம்!

சாஸ்த்ரா & சித்திரம் பேசுதடா குழுமம் இணைந்து நடத்திய மாமல்லை கோயில்களை நோக்கி வரலாற்று பயணம் இனிதே நடந்தேறியது! கல்லும் கதை சொல்லும் என்பது போல மாமல்லை படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும் புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுரத்தில், “தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” என்ற தலைப்பில் மாமல்லை கோயில்களை நோக்கி இந்த பயணம் 19 மார்ச் 2023 ஞாயிறு அன்று…

Chithiram Pesuthada