பூமிக்கடியில் நீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோவில்!

காஞ்சிபுரம் என்று சொன்னாலே பல கோவில்களை கொண்டது என்பதை நாம் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்னும் அறியப்படாத அழகிய மற்றும் புராதமான இடங்கள், கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த நடவாவி கிணறு. நடவாவி கிணறு | நடப்பா கிணறு | Nadavavi Kinaru நடவாவி கிணறு அல்லது நடவாய் கிணறு என்பது காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள அய்யங்கார்குளம் கிராமத்தில் அமைந்துள்ள…

பல்லவ சிற்ப கலைக் களஞ்சியம்! கங்காதர மூர்த்தி!

கிபி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுள் ஒருவரான இராசசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னவன் காலத்தில் கட்டப்பெற்ற ஒரு அழகான கற்றளி இந்த இறவாஸ்தானம். காஞ்சிபுரத்தில் உள்ள தொண்மையான கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாக கருதப்படுகிறது. ம்ருத்திஞ்ஜயேஸ்வர் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. சிவன் ஆலயங்களில் கோட்டத்தில் இடம்பெறும் மூர்த்தம் கங்காதாரர். கங்கை நதியை சிவன் தன் தலைமுடியில் ஏந்திய வடிவம். பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த, கங்கையின் வேகத்தை குறைக்க சிவபெருமான் கங்கையை தன் சடைமுடியில் தாங்கிய வடிவமே கங்காதரர் என்று கூறப்படுகிறது….

சூரியன் வழிபட்ட பதங்கிஸ்வரர் ஆலயம்!

அருள்மிகு பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பாலாற்றங்கரையில் வடக்கு புறத்தில், கிழக்கு நோக்கி அமைந்த பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பெற்றது. பின்பு வந்த சோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. முகமண்டபம் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டடுக்கு விமானத்துடன், பாதபந்த அதிட்டானத்துடன் கட்டப்பெற்றுள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து உற்றுர் கோட்டத்து பெரும்பலையூர் நாட்டு பெரும்பலையூர் என்றும் ராஜேந்திர சோழ நல்லூர் என்றும் அழைக்கப்பெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றது. முதலாம் பராந்தக சோழன், முதலாம் குலோத்துங்க…

கோவில்களில் துவாரபாலர்கள்!

கோவில் வாசலில் துவாரபாலர் இருவர் இருப்பதை நாம் காணமுடியும். “துவாரா” என்ற சொல் “வாயில்” என்றும், பால என்பது “காப்போன்” என்றும் பொருள்படும். கோவில்களில், துவாரபாலர் படிமங்கள் தல புராணத்தின் பின்னணியில் வைக்கப்பட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். பொதுவாக துவாரபாலர்கள் கோவில் வாயில்களின் இருபுறங்களிலும் காணப்படும் வாயிற்காப்போர் உருவங்கள். சிவன் கோவில்களில் திரிசூலநாதர் – மழுவுடையார், சண்டி – முண்டி, உய்யக்கொண்டார் – ஆட்கொண்டார், சண்டன் – பிரசண்டன், பிரம்மா – திருமால் ஆகிய துவாரபாலர்கள் காணமுடியும். வைணவ…

கதை சொல்லும் சிற்பங்கள்! கரி உரித்த சிவன்!

சிவபெருமானின் 64 வடிவங்களில் கஜாசுர சம்ஹாரர் என்ற வடிவமும் ஒன்று. கஜசம்ஹார மூர்த்தி என்றும் கரிஉரித்த சிவன் என்றும் கூறுவது உண்டு. பிரம்மனிடம் தவம்பூண்டு பெற்ற வரத்தினை வைத்து தேவர்களை வதைக்கிறான் #கஜாசுரன் என்ற அசுரன். முனிவர்களும், தேவர்களும் சிவனிடம் வேண்ட, யானை முகமுடைய ககஜாசுரனை வதம் செய்து தோலை உரித்துப் போர்த்துக்கொண்டு தாண்டவமாடி அகோரமாய் நின்றார் சிவபெருமான். இந்த வடிவத்திற்கு கஜயுத்த மூர்த்தி என்றும் பெயரும் உண்டு. கஜசம்ஹாரத்திற்கு இன்னுமொரு விதமாகவும் விளக்கம் உள்ளது, அதை…

அபூர்வ கோலத்தில் தெக்கணமூர்த்தி!

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) தலையை சற்றே சாய்த்து பார்க்கும் அழகு வேறெங்கும் காணமுடியாது அபூர்வ கோலம். இந்த ஆசனம் மனதைக் கட்டுப்படுத்துவதாகும். தமது வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக் காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார் தெக்கணமூர்த்தி. காலடியில் முயலகன் இல்லை. வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில்…

எழில்மிகு தர்மதாரா லிங்கம்!

முப்பத்திரண்டு(32) பட்டைகளுடன் காட்சி தரும் பல்லவர் கால எழில்மிகு தர்மதாரா லிங்கம். 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. சிற்ப சாஸ்திரத்தின் விதிப்படி, தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகிறது. அதாவது 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் /தாரைகள் அமைக்கப்பட்டிருக்கும். இடம்: ராமேஷ்வரர் லட்சுமனேஷ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் Beautiful Dharmadara Linga! Thirty-two (32) striped Pallava period Dharmadara Linga and the scholars believe…

சிவராத்திரிக்கு மட்டுமே திறக்கப்படும் அதிசய கோவில்!

பிறவாதீஸ்வரர் கோவில் | பிறவாதீசுவரர் | பிறவாத்தானேசுவரர் | பிறவாத்தானம் மேற்கு நோக்கி அமைந்துள்ள பிறவாதீசுவரர் கோவிலானது, மக்களால் அதிகம் அறியப்படாத ஒரு கலை பொக்கிஷம். காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் இக்கோவிலைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இராசசிம்மன் என்று அழைக்கப்பெற்ற இரண்டாம் நரசிம்ம பல்லவன் மன்னரால் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றது. இக்கோவில் இராசசிம்மன்னனால் கைலாசநாதர் கோவிலுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் கட்டிய முதல் கோவில். Piravadeeswarar Temple | Piravasthanam | Priravadeeswarar Temple | பிறவாதீசுவரர் | பிறவாத்தானம்…

Chithiram Pesuthada