தில்லை தென் கோபுரத்தை எடுப்பித்த கோப்பெருஞ்சிங்கன்!
சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்ட மன்னனான மணவாளப் பெருமான், என்று அழைக்கப்படும் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் தில்லை ஆடவல்லானிடம் பெரும் பற்றுடையவன். இவனுடைய 5ஆண்டில் தோன்றிய ஆற்றூர்ச் சாசனம் தில்லையம்பதியின் தெற்குக் கோபுரத்தைக் கட்டுவதற்கு இவன் செய்த தானத்தைக் குறிக்கிறது. இக்கோபுரம் இவனது பெயரால் “சொக்கச்சீயன் திருநிலை எழுகோபுரம்” என்று வழங்கப்பட்டது. இது ஏழு நிலைகளையுடைய கோபுரம் ஆகும். இத் திருப்பணிக்கு உடலாக ஆற்றூர் ஆன இராசராச நல்லூரில் நிலம் முன்னூற்றொன்றே முக்காலும், கொல்லைப் புன்செயும் சில்காசு ஆயங்களும் தேவதான…