தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் | அதிரணசண்ட மண்டபம்
அதிரணசண்ட குடைவரைக் கோயில்! சென்னை மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் புலிக்குகை வடபுறத்தே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதிரணசண்ட பல்லவேஸ்வர மண்டபம் என்ற பல்லவ வரலாற்றுச் சின்னம். இது ஒரு சிவன் கோயிலாகும். நீள்சதுரப் பாறையில் கிழக்கு நோக்கி அமைந்த்துள்ளது இந்த அதிரணசண்ட குடைவரைக் கோயில். முகப்பில், சதுரம், கட்டு, சதுரம் என்று அமைப்பில் இரண்டு முழுத் தூண்களும், இரண்டு அறைதூண்களும், வளைந்த தரங்கபோதிகைகளும், உத்திரம், வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் போன்ற பிரஸ்தர…