ஆனந்த வாழ்வு தரும் சோழர் கால ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்னேரி!
குலோத்துங்க சோழன் காலத்திய ஆனந்தவள்ளி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவிலானது, காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் அருகேயுள்ள திரையனூர் என்று அழைக்கப்பெற்ற தென்னேரி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இவ்வூரிலுள்ள ஏரி திரையனேரி என்றும் முற்காலத்தில் அழைக்கப்பெற்றது. ஏரியின் பெயரே மருவி இன்று தென்னேரி ஆனது. கோவிலுக்குள் நுழையும் முன்பு கொடிமரம் இல்லாமல் பலிபீடமும், நந்தி தேவர்க்கு தனி மண்டபமும் அமைந்துள்ளன. கோவில் கட்டிட கலையானது முப்பட்டை குமுதத்துடன் காணப்டும் அடித்தளம் பாதபந்த அதிட்டானம் என்ற அடிப்படையில் கட்டப்பெற்றுள்ளது. கிழக்கு…