பாண்டியர்களின் கலைப்பொக்கிஷம் கழுகுமலை சமணர் கோயில்!
தென்னகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படும் கழுகுமலை வெட்டுவான் கோயில் தலை கீழாக கட்டப்பட்ட கோயிலுக்கு பெயர் போனது. கழுகுமலை வெட்டுவான் கோயிலுக்கு மிக அருகாமையில் உள்ளது பராந்தக நெடுஞ்சடையன் காலத்திய (768-800 CE) கழுகுமலை சமணர் கோயில். இவ்விடத்தில் திகம்பர சமணத் துறவிகள் தங்கி சமண சமயத்தைப் பரப்பிய இடமாக பார்க்கப்படுகின்றது. கழுகுமலை சமணர் குடைவரையில் ஒரே பாறையில் வரிசையாக சுமார் 100-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கர்கள் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் இடம் இது. மகாவீரர், பாகுபலி, பர்ஸ்வநாதர், மற்றும்…