தமிழ்நாட்டின் பிரம்மாண்ட ராமர் கோவில்!

இன்றைக்கு நாம் பார்க்க போகும் இக்கோவில் தமிழ்நாட்டிலே பிரம்மாண்டமாக ராமருக்காக கட்டப்பட்ட யோக ராமர் கோவில். அதுபோக ராமர் இங்க வித்தியாசமா காட்சி தருகிறார், காணொளி முழுக்க எதையும் miss பண்ணாம பாருங்க அதுபோக நம்ம channel-அ இதுவரைக்கும் subscribe பண்ணாதவங்க subscribe பண்ணிக்கோங்க. இக்கோவிலுக்கு ராமச்சந்திர பெருமாள் கோவில் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இக்கோவிலானது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் இந்த பிரம்மாண்ட யோக ராமர் கோவில் இருக்கு. விஜயநகர மன்னர்களும்…

கிணற்றுக்குள் நடக்கும் அற்புத நிகழ்வு, நடவாவி உற்சவம்!

நடவாவி கிணறு | காஞ்சிபுரம் வரதராஜர் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் திரும்பவும் இந்த நடவாவி கிணறுக்கு வந்திருக்கேன். காரணம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் நடவாவி உற்சவம். நடவாவி கிணற்றை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த பதிவை, மறக்காம பாருங்க. https://chithirampesuthada.com/kanchipuram/ayyangarkulam-nadavai-kinaru/ | https://youtu.be/HSCbW0r-nZk நடவாவி உற்சவம் வருடா வருடம் சித்ரா பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் ஒரு அழகிய திருவிழா. யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் வரதருக்கு அபிஷேகம் செய்யப்படுவதே…

பூமிக்கடியில் நீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோவில்!

காஞ்சிபுரம் என்று சொன்னாலே பல கோவில்களை கொண்டது என்பதை நாம் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்னும் அறியப்படாத அழகிய மற்றும் புராதமான இடங்கள், கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த நடவாவி கிணறு. நடவாவி கிணறு | நடப்பா கிணறு | Nadavavi Kinaru நடவாவி கிணறு அல்லது நடவாய் கிணறு என்பது காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள அய்யங்கார்குளம் கிராமத்தில் அமைந்துள்ள…

சூரியன் வழிபட்ட பதங்கிஸ்வரர் ஆலயம்!

அருள்மிகு பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பாலாற்றங்கரையில் வடக்கு புறத்தில், கிழக்கு நோக்கி அமைந்த பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பெற்றது. பின்பு வந்த சோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. முகமண்டபம் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டடுக்கு விமானத்துடன், பாதபந்த அதிட்டானத்துடன் கட்டப்பெற்றுள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து உற்றுர் கோட்டத்து பெரும்பலையூர் நாட்டு பெரும்பலையூர் என்றும் ராஜேந்திர சோழ நல்லூர் என்றும் அழைக்கப்பெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றது. முதலாம் பராந்தக சோழன், முதலாம் குலோத்துங்க…

அபூர்வ கோலத்தில் தெக்கணமூர்த்தி!

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) தலையை சற்றே சாய்த்து பார்க்கும் அழகு வேறெங்கும் காணமுடியாது அபூர்வ கோலம். இந்த ஆசனம் மனதைக் கட்டுப்படுத்துவதாகும். தமது வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக் காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார் தெக்கணமூர்த்தி. காலடியில் முயலகன் இல்லை. வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில்…

Chithiram Pesuthada