மகேந்திரவர்ம பல்லவனின் உன்னத படைப்பு சத்ருமல்லேஸ்வரம்!
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் இன்றும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அதில் தனிச்சிறப்பு வாய்ந்தது தளவானூர் குடைவரைக் கோயில். முற்காலத்தில் தலைவாய்நல்லூர் என்று அழைக்கப்பெற்ற தளவானூருக்கு வடக்கே மாம்பட்டு என்னும் இடத்தில் பஞ்சபாண்டவர் மலையில் இக்குடைவரைக் கோயிலை காணலாம். கல்வெட்டின் மூலமாக இக்குடைவரைக் கோயில் ‘சத்ருமல்லேஸ்வரம்‘ என்று அழைக்கப்பெற்றதாக அறியமுடிகின்றது. தமிழ்நாட்டிலுள்ள குடைவரைக் கோயில்கலில், முகப்பில் மகரத் தோரண பெற்ற ஒரே குடைவரை என்பது சத்ருமல்லேஸ்வராலயத்தின் தனிச் சிறப்பாகும்….