பாண்டியர்களின் கலைப்பொக்கிஷம் கழுகுமலை சமணர் கோயில்!

Jain-reliefs at Kazhugumalai

தென்னகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படும் கழுகுமலை வெட்டுவான் கோயில் தலை கீழாக கட்டப்பட்ட கோயிலுக்கு பெயர் போனது. கழுகுமலை வெட்டுவான் கோயிலுக்கு மிக அருகாமையில் உள்ளது பராந்தக நெடுஞ்சடையன் காலத்திய (768-800 CE) கழுகுமலை சமணர் கோயில். இவ்விடத்தில் திகம்பர சமணத் துறவிகள் தங்கி சமண சமயத்தைப் பரப்பிய இடமாக பார்க்கப்படுகின்றது. கழுகுமலை சமணர் குடைவரையில் ஒரே பாறையில் வரிசையாக சுமார் 100-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கர்கள் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் இடம் இது.

கழுகுமலை சமண குடைவரை | Boulder Carved with Jain Figures, Kalugumalai | Chithiram Pesuthada

மகாவீரர், பாகுபலி, பர்ஸ்வநாதர், மற்றும் பல சமண தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலையிலுள்ள சிற்ப உருவங்களும், யக்ஷர், யக்ஷி ஆகியோர் சிற்பங்களும், யக்ஷிகளின் கரங்களில் சாமரங்களும் இங்கு உள்ளன. மிகவும் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் இயக்கன், இயக்கியின் உருவங்களும் இங்கு அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு சிற்ப வரிசையில் பத்மாவதியும், தரனேந்திரயக்ஷனும் காணப்படுகின்றனர். பாண்டியர்களின் கலைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது இந்த பார்சுவநாத தீர்த்தங்கரரின் உருவ அமைப்பு. தலைக்குமேல் படம் எடுத்தவாறு உள்ள நாகத்துடன் நின்ற கோலத்தில் உள்ள பார்சுவநாத தீர்த்தங்கரரின் பார்க்க நிஜத்தில் ஒரு உருவம் நிற்பதுபோன்று தத்ரூபமாக உள்ளது.

கோட்டாறு, மிழலூர், வெண்பைக்குடி முதலிய 32-க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த சமணப் பெரியார்கள், இவுருவங்களை செய்திருக்கிறார்கள். வேளான், தச்சர், கொல்லர், குயவர் முதலியோரும், எட்டி, எனாதி, காவிதி முதலிய சிறந்த பட்டங்கள் பெற்றவர்களும் இச்சிற்பங்களை செய்துள்ளனர்.

ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் வட்டெழுத்தில் வாசகம் உள்ளது, அதில் செதுக்குவித்தவர் பெயரும் முகவரியும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு வாசகத்தால் கழுகுமலைக்குத் திருமலை என்ற பெயரும் அந்தக் கிராமம் நெச்சுர நாட்டுத் திருநெச்சுரம் என்று வழங்கப் பட்டதும் அறியமுடிகின்றது.

Kalugumalai Jain Reliefs
Kalugumalai Jain Reliefs

வல்லுநர்கள் இங்கே மிகப் பெரிய பல்கலைக் கழகம் இருந்திருக்கவேண்டும் என்றும் பிரபலமான பேராசிரியர்களைக் கொண்டு 300ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து கழுகுமலையில் இயங்கி வந்திருக்கிறது என்றும் கூறுகின்றனர். ஆண்களே அன்றிப் பெண்களும் இங்கு மாணவிகளாகவும் ஆசிரியர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

2000 ஆண்டு பழமையான மதமும் அதைப்பற்றிய வெவ்வேறு கதைகள் உலவினாலும் அன்பையும், சமாதானத்தையும் பழக்கிய சமணர்கள் வாழ்ந்த இந்த கழுமலை சமணர் படுகையை நேரம் கிடைத்தால் நேரில் சென்று காணுங்கள்! வரலாறு உங்களோடு மட்டும் நிற்காமல் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்லுங்கள்.

Kalugumalai Jain Reliefs
Kalugumalai Jain Reliefs

Boulder Carved with Jain Figures at Kalugumalai

Jain monastery or Jain reliefs at Kazhugumalai.

Kalugumalai Jain Beds, Kalugumalai, Thoothukudi District, Tamil Nadu.
Location: https://goo.gl/maps/sZY3h55Yqa22fzB7A


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


Vettuvankovil has been called the Ellora of the South due to its similarity with the Kailash Temple at Ellora. This famous monolithic temple was constructed during the Pandya Kingdom. And close to this favourite site is another large rock carved with Jain figures of exquisite beauty, resembling the carvings on the monolithic temple.

Extensive panels symbolise Tirthankaras, flanked by attendants, seated on thrones, each under his separate tree, with the triple umbrella over their heads. The iconography shows dancers within the foliage, horse riders and elephants emerging from the stone, and this pattern is repeated at other places as well. One of the panels shows Dharanendra Yaksha and Padmavati. And Other panels show elaborately worked Yakshas and Yakshis. The panel of the standing Parsvanatha with the snake hoods over his head is a jewel of early Pandya craftwork. The Unique aspect of Parshwanath is that the Naga protecting Parshwanath is shown in semi-human form instead of the traditional serpent hood form. There is so much awareness and aesthetic sense of the sculptors displayed in this rock art. The importance given to female figures is a notable aspect of these Kazhugumalai bas-reliefs.

In memory of the departed souls, they carved the sculpture. There are approximately 150 relief sculptures. In addition, long rows of seated Tirthankara figures repeat the complete hierarchy of Tirthankara three times over.

There are 98 inscriptions associated with Jainism at the Kalugumalai Jain Beds site, the largest known concentration of Jain inscriptions in far south India at a single location. Many inscriptions include the word Kurathi, which denotes a female teacher. The bas-reliefs are done by those who hold the titles of Enathi, Etti, Kavithi etc. There are several Jain images with labels in the Vattezhuthu script. The epigraphs mention the name of the donors, the figures, the provisions made for the offerings, etc. Scholars believe the construction of this unfinished site belongs to the reign of Pandyan king Parantaka Nedunjadaiyan (768-800 CE). And also, Scholars suggest the Kalugumalai is one of the oldest Jain sites in South India.

Kalugumalai Jain Reliefs
Kalugumalai Jain Reliefs

Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici

Chithiram Pesuthada