தமிழ்நாட்டின் பிரம்மாண்ட ராமர் கோவில்!

Yoga Ramar Temple

இன்றைக்கு நாம் பார்க்க போகும் இக்கோவில் தமிழ்நாட்டிலே பிரம்மாண்டமாக ராமருக்காக கட்டப்பட்ட யோக ராமர் கோவில். அதுபோக ராமர் இங்க வித்தியாசமா காட்சி தருகிறார், காணொளி முழுக்க எதையும் miss பண்ணாம பாருங்க அதுபோக நம்ம channel-அ இதுவரைக்கும் subscribe பண்ணாதவங்க subscribe பண்ணிக்கோங்க.

இக்கோவிலுக்கு ராமச்சந்திர பெருமாள் கோவில் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இக்கோவிலானது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் இந்த பிரம்மாண்ட யோக ராமர் கோவில் இருக்கு. விஜயநகர மன்னர்களும் நாயக்க மன்னர்களும் இக்கோவிலை கட்டிபிருப்பாங்கனு எளிதா சொல்லக்கூடிய அளவுல இந்த கோவிலோட அமைப்பு இருக்கு.


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


 Yoga Ramar Temple, Nedungunam

இக்கோவிலின் சிறப்பே இக்கோவிலின் பிரம்மாண்டம் தான். 6 அடுக்கு ராஜகோபுரம் கடந்து உள்ளே சென்றால், எவ்ளோ பெரிய கோவில்னு நம்மள ஆச்சரியயத்துல தள்ளுது இக்கோவிலின் வளாகம்.

கோவிலின் தெற்கு திசையில் 16 கால் ஊஞ்சல் மண்டபம், வடக்கு திசையில் 100கால் கல்யாண மண்டபமும் நாயக்க மன்னர்களோட சிற்ப கலைக்கு இலக்கணமாக இருக்கின்றது. தூண் முழுக்க சிற்பங்கள், அதுபோக 100 கால் மண்டபத்தில் படிபோன்ற அமைப்பு காணமுடியும். இந்த அமைப்பினை சோபானம் என்று கட்டிட கலை கூறுகின்றது. இங்கே கைப்பிடியாக யாளியோட சிற்பம் கண்களுக்கு விருந்தளிக்கின்றது.

இரண்டு மண்டபத்திற்கு மத்தியில பலிபீடம், கொடிமரம் காணமுடியும். அதன் பின்புறம் இன்னொரு ராஜ கோபுரம். இந்த 5 நிலை கோபுரத்தினை, கிளி கோபுரம் என்று மக்களால் அழைக்கப்படுகின்றது.

கோவிலின் தென்மேற்காக தாயாருக்கு ஒரு தனி சன்னதி கட்டிருக்காங்க. இங்கே “செங்கமலவல்லி தாயார்” என்ற வடிவில் நமக்கு காட்சி தருகிறாள் அன்னை. சன்னதியோட தூண்களில் நிறைய சிற்ப வேலைப்பாடுகள் அழகுற காணமுடிகின்றது.

அடுத்ததா கிளி கோபுரத்தில் என்ன இருக்குனு பார்ப்போம்.

விஜயநகர கட்டிட கலைக்கு எடுத்து காட்டா இருப்பது இந்த கொடி நங்கைகள். பொதுவா நெறய கோவில்ல இச்சிலை முழுசா பார்க்க முடியாது, இங்க அதிசயமா முழுசா பார்க்க முடிகின்றது.

கிளி கோபுரத்தின் சுவர் பகுதியில் நிறைய புடைப்பு சிற்பங்கள் காணமுடிகின்றது, அதில் ராமாயண காட்சிகள், தசாவாதார காட்சிகள், வாலி சுக்ரீவன் சண்ட போன்ற காட்சி, கஜேந்திர வரதர், ராமன் மரங்களை துளைக்கும் காட்சிகள் இங்கே சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

இக்கிளி கோபுரம் கடந்து உள்ளே சென்றால் இன்னொரு திருச்சுற்று, அதுவும் கலை நயத்தோட நூல் பிடிச்ச மாதிரி ராமரோட சன்னதி அழகா கட்டிருக்காங்க.

இவ்ளோ அழகான பிரகாரம் நான் எங்கயும் பார்த்தது இல்லை என்றே கூறுவேன். அதுபோக சுவர் பகுதில கோஷ்டங்கள், கும்ப பஞ்சரங்கள், கோட்ட பஞ்சரங்கள் அழகா காட்டிருக்காங்க. சுவரோட மேல்பகுதில கூரை மாதிரி ஒரு அமைப்பு இருக்கு, இத கபோதம்னு சொல்லுவாங்க. அங்க நிறைய கூடுகள் காமிச்சிருக்காங்க. அதுல இறை உருவங்கள், விலங்குகள், மனிதர்கள், சங்கு, சக்கரம் அதுபோக விஜயநகர மன்னர்களோட எடுத்துக்காட்ட பார்க்கப்படுகின்ற அமர்ந்த நிலையில சிங்கமும் இங்கே சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

கோவிலோட அடித்தளத்தில் துணைத்தளம் இருக்கு அதாவது உபரி தளம் வைத்து கட்டுமானம் அமைத்துள்ளார்கள். அதோடு இல்லாம குமுதம் பகுதில சிலம்பு மாதிரி ஒரு அமைப்பு காட்டிருக்காங்க. பொதுவாக இந்த அமைப்பு விஜயநகர கட்டுமானத்தில் இதை அதிகமாக காணமுடியும்.

பிரகாரத்தை சுற்றி சின்ன சின்ன சன்னதிகள் இருக்கு. தென் மேற்கா சக்ரத்தாழ்வார் பார்க்க முடிகின்றது, வடக்கு பக்கமா விகனஸாச்சார்யர் (வைகானசர்), கிழக்கு பக்கமா அனுமன் பார்க்க முடிகின்றது.

இங்கே துவாரபாலர்கள் கம்பீரமா பார்க்க முடிகின்றது. இவர்களை ஜெயன் விஜயன் என்று கூறுவார்கள் .

கருதிவரையில் ராமர் எந்த வித ஆயுதம் இல்லாமல் அதாவது கையில் வில் இல்லாமல், அமர்ந்த நிலையில், வலது கரம் சின் முத்திரையோடு அவரோட மார் பகுதியில் அனைத்தது போன்று, கண்கள் மூடியவாறு நமக்கு காட்சி தருகிறார். இந்த மாதிரி ஒரு அமைப்பு வேறெங்கும் காண முடியாத அற்புத காட்சி. பக்கத்தில் சீதாப்பிராட்டியும், லட்சுமணன் வில் ஏந்தியவாறு பார்க்க முடிகின்றது. அனுமன் பிரம்ம சூத்திரம் படிப்பது போல் இங்கே காண முடியும்.

கருவறை சுற்றி வருவது போன்று இன்னொரு திருச்சுற்று இங்கே அமைக்கப்பட்டுள்ளது ஆக மொத்தத்தில் மூன்று திருச்சுற்றுகளோடு இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் அழகான கோவில், அனால் இப்படி ஒரு பிரம்மாண்டமான ராமர் கோவில் தமிழ்நாட்டுல இருப்பது மக்களுக்கு தெரியாமல் இருப்பது நம்மை வியப்பில் தள்ளுகிறது. நேரம் கிடைத்தால் நேரில் சென்று காணுங்கள்.

வரலாற்றை தேடி என் பயணம் இன்னும் நிறைய போக வேண்டிருக்கு, அதுக்கு உங்களோட அன்பும் ஆதரவும் தேவையா இருக்கு. அடுத்து இன்னொரு கோவில், விரைவில் சந்திக்கிறேன், நன்றி வணக்கம்!

Yoga Ramar Temple, Nedungunam
Yoga Ramar Temple, Nedungunam

Yoga Ramar Temple | Yoga Rama Temple | Ramachandra Perumal Temple

Nedungunam, Tiruvannamalai District, Tamil Nadu, India
God: Sri Yoga Ramar | Sri Ramachandra Perumal
Goddesses: Sri Sengamala Valli
Location: https://goo.gl/maps/zGfemvZANeyhs8tg6


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


In a beautiful village called Nedungunam, called Nedunkundram, this Vijayanagara period Temple, Yoga Ramar Temple (AKA) Ramachandra Perumal Temple, was constructed.

Temple Architecture:
The east-facing Yoga Ramar Temple has an enchanting 6-tier Rajagopuram structure and another 5-tier Rajagopuram called Kili Gopuram, named in honour of Suka Brahma Maharishi. The Sanctum sanctorum consists of sanctum, Antarala, Artha mandpa and Muka mandapa.

History:
Scholars believe the temple has existed since the 7th Century and was built during the Pallava period. Later, the temple might be reconstructed during the Vijayanagara period. The inscriptions are available from the 16th-century Vijayanagara period.


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici


Chithiram Pesuthada