மகேந்திரவர்ம பல்லவனின் உன்னத படைப்பு சத்ருமல்லேஸ்வரம்!

Shatru Malleswaralayam | Thalavanur Rock Cut Temple, Villupuram District

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் இன்றும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அதில் தனிச்சிறப்பு வாய்ந்தது தளவானூர் குடைவரைக் கோயில்.

முற்காலத்தில் தலைவாய்நல்லூர் என்று அழைக்கப்பெற்ற தளவானூருக்கு வடக்கே மாம்பட்டு என்னும் இடத்தில் பஞ்சபாண்டவர் மலையில் இக்குடைவரைக் கோயிலை காணலாம். கல்வெட்டின் மூலமாக இக்குடைவரைக் கோயில் ‘சத்ருமல்லேஸ்வரம்‘ என்று அழைக்கப்பெற்றதாக அறியமுடிகின்றது.

தமிழ்நாட்டிலுள்ள குடைவரைக் கோயில்கலில், முகப்பில் மகரத் தோரண பெற்ற ஒரே குடைவரை என்பது சத்ருமல்லேஸ்வராலயத்தின் தனிச் சிறப்பாகும். மகரங்கள் அகலமாய் வாய் திறந்து ஒன்றையொன்று நோக்கிய பாவனையும், அவற்றின் துதிக்கைகளும் மிக்க அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன.

பாதபந்த தாங்குதளம் பெற்ற ஒரே குடைவரைக் கோயில் என்பதால், இதனை கட்டுமானக் கோயில் தாங்குதள அமைப்பிற்கு முன்னோடி எனலாம். அதுபோக முன்றில் படிப் பெற்ற முதல் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில் சத்ருமல்லேசுவர் குடைவரை என்பது தளவானூர் குடைவரைக் கோயிலின் சிறப்பாகும்.

முக மண்டபம், அர்த்தமண்டபம், முன்றில், கருவறை ஆகிய அங்கங்களைக் கொண்டு இக்குடைவரையின் முகப்பின் கிழக்கிலும் மேற்கிலும் அகலமான, ஆழமான கோட்டங்களில் துவாரபாலர்கள் வடிக்கப்பட்டுள்ளனர். அதுப்போக கருவறை முகப்பின் இருபுறத்திலும் இருவேறு துவாரபாலர்கள் செதுக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக குடைவரைக் கோயில்களில் தாய்ப்பாறையில் இறைவனை காண நேரிடும். ஆனால் இங்கு ஆழமான சதுரப்பள்ளம் அகழ்ந்து லிங்கபாணம் பொருத்தப்பட்டுள்ளது. இத்தனை பிரமாண்டமான உருவத்தை சிறுவாசல் வழியாக எடுத்துச்சென்றது சாத்தியமில்லா நிகழ்வுதான்.

Shatru Malleswaralayam | Thalavanur Rock Cut Temple, Villupuram District
Shatru Malleswaralayam | Thalavanur Rock Cut Temple, Villupuram District

Thalavanur Cave Temple – Satrumalla Pallava Cave Temple

Shatru Malleswaralayam | Thalavanur Rock Cut Temple, Villupuram District, Tamil Nadu., India
Location: https://maps.app.goo.gl/qUymmZE5aBZW9jZ26


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


The temples the Pallava king Mahendravarman built are still a fine example of Tamil Nadu’s temple architecture. Thalavanur Cave temple is the most notable among them. The almost-finished cave temple at Dalavanur is a fascinating early Pallava example. This Thalavanur cave temple is an excellent instance to illustrate how carefully the excavators choose the location and design of their cave temples.

The inscription mentions this temple as ‘Satrumallesvaralaya‘, and the locals say this rock is “PanchaPandava Malai“. The Satrumallesvara Temple at Thalavanur / Dalavanur, built by the Pallava King Mahendravarman I, belongs to the early phase of Pallava architecture represented by a series of rock-cut shrines built between the 7th and 9th centuries in the Tondai Mandalam region.

Another advancement here is in the form of an exquisite Makara-Torana. This elaborate but straightened makara-torana, spanning the central opening, adds much to the beauty of this picturesquely situated cave temple.

The architrave or Prastara portion is artistically finished on the tops of the corbels. It consists of a curved Kapota with five well-formed Koodu arches with Gandharva faces inside, the outer line of the Kapota almost flush with the general line of the natural scarp, showing that it was carved almost into the original rock face.

Both the Linga and Yoni pedestals are detached stones and are not monolithic like the rest of the temple and its ornamentation. Except for the Linga and the figures of the doorkeepers, the entire decoration is Buddhist.


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici

Chithiram Pesuthada