ஓர் பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு,
ஏசும் படி ஓர் இளங்கொடி ஆய், ‘ஆசு இலாய்!
செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்;
பொய் உரையே அன்று; பொருள் உரையே; கையில்
படு பிணம் தா’ என்று, பறித்து, அவள் கைக் கொண்டு,
சுடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில் சென்று, ஆங்கு
இடு பிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி,
மடிஅகத்து இட்டாள், மகவை இ்டியுண்ட
~ சிலப்பதிகாரம்
முன்னொரு நாளிலே, ‘மாலதி‘ என்பவள், தன்னுடைய மாற்றாளின் மகவுக்குப் பாலூட்டினாள். பால் விக்கிப் பாலகன் மரித்தான். மாலதியும், “பார்ப்பானோடு அவன் மனையாளும் என்மேல் அடாத பழி கூறுதலைவிட்டு, ஏற்புடைய உண்மையைச் சொல்வார்களே!” என்று ஏங்கினாள். மக மகவை எடுத்துக் கொண்டு, கற்பகத்தரு நிற்கும் கோயில், ஐராவதம் நிற்கும் கோயில், பலதேவரின் கோயில், பகற்பொழுதுக்கு வாயிலோனான சூரியனின் கோயில், ஊருக் குரிய தேவதை இருக்கும் கோயில், வேலவனின் கோயில், வச்சிரப்படை நிற்கும் கோயில், பாம்பணையான் வீற்றுள்ள கோயில், அருகன் கோயில், சந்திரன் கோயில் ஆகிய இடம் எல்லாம் சென்றாள். ‘தேவர்களே! எனக்குற்ற நோயினைத் தீருங்கள் எனவும் அழுதழுது வேண்டினாள்; யாதும் பயனில்லை.
அதன்பின், பாசண்டச் சாத்தனின் கோயிலை மாலதி அடைந்தாள். அவன்பால் குழந்தை உயிர்பெற வரம் வேண்டிப் பணிந்து பாடுகிடந்தாள். அவ்விடத்தே, பிறரைப் பழிக்கும் அழகுடைய ஓர் இளங்கொடிபோல இடாகினிப் பேய் ஒன்று வந்து, அவள்முன் தோன்றிற்று. “குற்றமற்றவளே! செய்தவம் இல்லாத உன் போன்றோர்க்கு எந்தத் தேவரும் வந்து வரம் கொடுப்பதில்லை. இது பொய்யான கனாத்திறம் உரைத்த காதை வார்த்தையன்று: உண்மையே தான்” என்றது. “உன் கையிலே உள்ள உயிர் இழந்துபோன பிணத்தை என்னிடம் தருவாயாக” என்று பறித்துத், தன் கையிலேயும் எடுத்துக் கொண்டது. அடர்ந்த இருளோடு இருளாகச் சுடுகாட்டிற் களைத் தின்னும் அந்த இடாகினிப்பேயானது, அக் குழந்தையின் பிணத்தையும் பிய்த்துத் தன் வயிற்றினுள் போட்டுக் கொண்டது.
சிலம்பு கூறும் இக்கதையில் இடாகினிப்பேய் என்பவள் ஒரு பிணம் தின்னிப் பேய் என்று அறியமுடிகிறது. இன்றும் வழிபாட்டில் இருக்கும் இந்த பல்லவர் கால சிற்பம், ஊர் மக்களால் காளி என்றும் கொற்றவை என்றும் அறியப்படுகிறாள்.
Idagini
Marangiyur, Viluppuram District, Tamil Nadu
Location: https://goo.gl/maps/RW8HCoZFu1pGft599
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici