இங்குள்ள இறைவன் சிவலோகநாதர், சுயம்பு மூர்த்தியாக மக்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனின் காவலர்களாகிய ‘திண்டி, முண்டி’ வழிபட்ட தலமாக இக்கோயில் பார்க்கப்படுகின்றது. முண்டி வழிபட்டதால் இத்தலம் ‘முண்டீச்சரம்’ என்று அழைக்கப்பெற்று அதுவே காலப்போக்கில் ‘திருமுண்டீச்சரம்’ என்று அழைக்கப்பெற்றுள்ளது. ‘முடீச்சரம்‘ என்பதே இத்தலத்தின் புராணபெயராக இருந்துள்ளது.
சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திய கல்வெட்டு ஒன்று “பொக்கணங் கொடுத்தருளிய நாயனார் கோயில் தானத்தார்க்கு அரசன் அனுப்பிய ஓலையிது. அதன்படி, இவ்வூரினைத் தேவதான இறையிலியாக்கி, வரிகளைக் கோயிலுக்குக் கொடுத்ததைக் குறிக்கிறது. விக்கிரமபாண்டியனான மூலத்தான வேளானின் பொறுப்பில் நாள்தோறும் நூறு மாலைகளுக்காக 1200 பூக்களை அளிக்க வேண்டுமெனவும், அவனது வாழ்க்கைச் செலவுக்காக ஒரு வேலி நிலம் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது.” இதன் மூலம் வீரபாண்டியன் எனும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப் பை, (பொக்கணம்) தந்தார் ஆதலின் இவ்விறைவன் “பொக்கணம் கொடுத்த நாயனார்” என்று அழைக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
இராஜராதித்தரின் படைத்தலைவனும் கேரள மாமனிதனுமான புத்தூரைச் சேர்ந்த வெள்ளங் குமரன் என்பான் பெண்ணைக் கரையிலமைந்த மௌலி கிராமத்தில் கற்றளியாக, இக்கோயிலை எடுப்பித்தான் என்று கல்வெட்டுகள் கூறுகிறது. ஊரின் பெயர் ‘திருமுடியூர்‘ என்றும், ஆற்றின் கரையிலுள்ள கோயில் என்பதால் ஆற்றுத்தளி என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுபோக இறைவன் “ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர்” என்றும் அழைக்கப்பெற்றுள்ளார்.
அதுபோக இறைவனுக்கு மலரும், பொன்னும், நிலமும், ஆடுகளும், தானமாக கொடுத்த செய்தியும் இங்கே காணப்படுகின்றன. சோழ மன்னர்களான முதலாம் பராந்தகன், ஆதித்த கரிகாலன், முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், பாண்டிய மன்னரான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இராஷ்டிரகூட மன்னரான கண்ணரதேவன் (மூன்றாம் கிருஷ்ணன்), விஜயநகர மன்னரான வீரவிருப்பண உடையார் ஆகியோரது கல்வெட்டுகள் இங்கே கிடைக்கின்றது.
வீரபாண்டியன் தலைக்கொண்ட கோப்பரகேசரி காலத்தில் ஒரு நந்தா விளக்கு எரிக்க 90 சாவாமூவாப் பேராடுகள் கொடுத்ததை கூறுகின்றது. கண்ணரதேவன் காலத்தில் ஈழவிளக்கு ஒன்றினை எரிக்க 32 சாவாமூவாப் பேராடுகள் கொடுத்ததை கூறுகின்றது.
ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அவனின் கீழிருந்த விக்கிரம பாண்டிய வாணாதராயன், தான் பெரும் வரிகளை இக்கோயில் தானத்தாரிடம் கொடுத்ததை கூறுகின்றது. அதுபோக கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் கொடுக்கப்பெற்ற நிலங்கள் நீங்கலானவை என்று வரி பெரும் நிலங்களை குறிக்கும் பொழுது இதை குறிப்பிட்டுள்ளனர்.
இத்தனை சிறப்பு மிகுந்த இக்கோயிலை நேரம் கிடைத்தால் நீங்களும் நேரில் சென்று காணுங்கள்.
Sivalokanathar Temple
Thirumundeeswaram, Gramam, Tamil Nadu, India
Location: https://maps.app.goo.gl/tywy4zts4naFXGVYA
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
God: Sivalokanathar, Mudeeswarar, Mundeesar.
Goddess: Soundarya Nayagi, Kannaar Kuzhalali, Selvanayagi.
In a beautiful place called Gramam, this Chola period, Sivalokanathar Temple, was constructed. Dindi and Mundi, the Dwarapalakas of Shiva, worshipped the lord here. Dindi worshipped the lord at Tindivanam, and at this place, where Mundi worshipped the lord; hence, the place’s original name was Mundeeswaram.
Temple Architecture:
The east-facing Sivalokanathar temple has an enchanting Dvi-Tala Vimana structure consisting of a Sanctum Sanctorum followed by an Artha mandapa, Maha mandapa and Mukha Mandapa. The temple was built with stone from Aditana to Prastara and Prastara to Shikhara with brick. In Koshta, Ganesha, Dakshinamurthy, Vishnu, Brahma, and Durga were housed.
The sculptures found in the temple complex are an example of Chola artistry. It is worth noting that there is a sculpture of Dakshinamurti without the usual tree canopy sitting on a Rishaba Vahana.
History:
The Original temple existed during the Pallava period & during the period of Chola might be reconstructed. Inscriptions mention this place as ”Mouli Gramam.” It also says the Lord Shiva as “Pokkanam Kodutha Nayanar“, “Atruthali Peruman“, and “Atruthali Mahadevar“.
In this Sivalokanathar temple, Scholars have seen the inscriptions of Chola King Prantaka-I, Aditha Karikalan-II, Rajendra Chola I, Kulothunga Chola-I, Pandya King Jatavarman Sundara Pandyan, Veera Pandyan, Rashtrakuta King Kannara Devan, Vijayanagara King Virupanna Udayar.
Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici