பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் என்ற திருப்போந்தை ஆழ்வார் சிவன் கோயில், இராஜேந்திர சோழனின் பள்ளிப்படை என்றே செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் கல்வெட்டை நன்கு ஆய்ந்த ஆய்வாளர்கள் இக்கோயில் பள்ளிப்படை கோயில் அல்ல என்றும் இது வழக்கமாக அமைக்கப்பட்ட சிவன் கோயில் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதற்கு அவர்கள் ஆதாரமாக கொள்வது இக்கோயிலில் உள்ள கம்பவர்மன் கல்வெட்டு ஆகும். முன்பாகவே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில் எப்படி பள்ளிப்படை கோயிலாக இருக்கும் என்பது அவர்களது வாதம்.
பிரம்மதேசம் கோயில் கல்வெட்டுகளில் பல்லவ அரசர் கம்பவர்மன், சோழ அரசர்களில் ஆதித்தியன், பராந்தக சோழன், சுந்தரசோழன், பார்த்திவேந்திரவர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், முதலாம் இராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜேந்திரன், வீரகம்பண்ணன் ஆகியோர்களது கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் வீர கம்பண உடையாரின் கல்வெட்டே காலத்தால் பிந்தையதாகும்.
1000 ஆண்டுகளுக்கு முன் சீர்பெற்று விளங்கிய இடம், இன்று சிறிய கிராமமாக உள்ள பிரம்மதேசத்தில் பல்லவர் காலத்து சந்திரமௌலீஸ்வரர் என்ற திருப்போந்தை ஆழ்வார் கோயில், சோழர் கால உருத்திர கோட்டீஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில், ஆதித்த க்ருஹம் என்ற சூரிய கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் கொண்டு சிறந்து விளங்குகிறது.
தொண்டை மண்டலத்தின் அமைந்துள்ள பிரம்மதேசம் கல்வெட்டுகளில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து தாமர் கோட்டத்து தாமர் நாட்டு கரைக்கோட்ட பிரம்மதேயம் என்று குறிப்பிடுகிறது. இதில் ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்பது சோழர் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிப்பிரிவாகும்.
Sri Chandramouleeswarar Temple
Brahmadesam, Tiruvannamalai District, Tamil Nadu, India
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
The ongoing debate about this temple is the cremation/burial place of the greatest ruler of the Chola Dynasty – Rajendra Chola I (Gangaikondan – who conquered up to the mighty Ganges). This Chandramouleeswarar temple has an inscription which proves that the temple belongs to the 9th Century and was built by Vijaya Kampavarma Pallavan.