ஆனந்த வாழ்வு தரும் சோழர் கால ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்னேரி!

Abathsahayeswarar

குலோத்துங்க சோழன் காலத்திய ஆனந்தவள்ளி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவிலானது, காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் அருகேயுள்ள திரையனூர் என்று அழைக்கப்பெற்ற தென்னேரி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இவ்வூரிலுள்ள ஏரி திரையனேரி என்றும் முற்காலத்தில் அழைக்கப்பெற்றது. ஏரியின் பெயரே மருவி இன்று தென்னேரி ஆனது.

கோவிலுக்குள் நுழையும் முன்பு கொடிமரம் இல்லாமல் பலிபீடமும், நந்தி தேவர்க்கு தனி மண்டபமும் அமைந்துள்ளன. கோவில் கட்டிட கலையானது முப்பட்டை குமுதத்துடன் காணப்டும் அடித்தளம் பாதபந்த அதிட்டானம் என்ற அடிப்படையில் கட்டப்பெற்றுள்ளது.

கஜபிருஷ்ட விமானம் | Gajaprishta Vimana

கிழக்கு நோக்கிய வாயிலின் உள்ளே மஹா மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை அமைந்துள்ளன. ப்ரஸ்தரம் வரை நாகரமாகவும், அதன் மேல் உள்ள விமான பகுதி கஜபிருஷ்டமாகவும் காணப்படுகிறது. அதாவது தூங்கானைமாடம் என்று தமிழில் கூறுவார்கள். பொதுவாக தொண்டை மண்டலத்தில் பல்லவர்களால் அதிகமாக கட்டப்பெற்ற வடிவம் இந்த தூங்கானை மாடம்.

ஆபத்சகாயேஸ்வரர் கோவிலின் உள்ள கோட்டத்தில் தெற்கு நோக்கி நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கி மஹா விஷ்ணுவும், வடக்கு நோக்கி பிரம்மா மற்றும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கையும் இடம் பெற்றுள்ளனர். கோட்டத்தில் மேலுள்ள தோரணத்தில் பிச்சாடனர், ஆலமர்செல்வன், யோக நரசிம்மர், பரமபத நாதர் குருசிற்பமாக காணமுடியும். சண்டிகேஸ்வரர் அவருக்கு உரித்தான இடத்தில் இறைவனை பார்ப்பது போன்று காணப்படுகிறார்.

உத்தம சோழன், கண்டராதித்தர், செம்பியன் மாதேவியார்

விநாயகருக்கும், தட்சிணாமூர்த்திக்கு இடையில் சிவனை பூஜிப்பது போன்று புடைப்பு சிறப்பாம் காணப்படும். அதில் முனிவர் போன்ற உருவத்தில் இருப்பது கண்டாரதித்த சோழர் என்றும், அருகிலே நிற்பவர் சோழ அரசி செம்பியன் மாதேவியார் என்றும், சிறுவன் போன்ற உருவம் உத்தம சோழனாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கல்வெட்டுகளில் இறைவனை “திருவனந்தீச்சரம் உடைய மஹாதேவர்” என்றும் இவ்விடத்தை உத்தம சோழன் காலத்தில் “உத்தம சோழ சதுர்வேதி மங்களம்” என்றும் குலோத்துங்க சோழன் காலத்தில் “வளநாட்டு திரையனூரான குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலமென” என்று அழைக்கப்பெற்றதாக கூறுகின்றது.

வீரராஜேந்திரன் தொடங்கி, முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜாதி ராஜன், சுந்தர பாண்டியன் என்று கல்வெட்டின் பதிவுகள் நீண்டுகொண்டே செல்கின்றன. இதில் இறைவனுக்கு அணையா விளக்கு எரிக்கவும், அமுது படிக்கவும், பொன்னும், பொருளும், நிலமும் தானமாக குடுத்த செய்திகள் காணப்படுகிறது.

ஆனந்தத்தை அள்ளித்தரும் இறைவனை நேரம் கிடைத்தால் நேரில் சென்று காணுங்கள்!

Sri Abathsahayeswarar Temple

Sri Abathsahayeswarar Temple | Abathsahayar Temple | Anandeeswarar Temple, Thenneri, Kanchipuram District, Tamil Nadu.

God: Sri Abathsahayeswarar | Thiruvananthecharamudaya Mahadevar
Goddesses: Sri Anandavalli
Location: https://goo.gl/maps/kShQfdSQbk1vijqb7

Special Thanks to
Babu Mano, Temple Architecture Trainer & History Enthusiast



In a beautiful village called Thenneri, named after the lake Thirayaneri, this Kulothunga Chola I period Temple, Abathsahayeswarar Temple, was constructed. The east-facing Temple has Balipeedam and gorgeous Nandhi housed in a small mandapa.

Temple Architecture:
Temple architecture has Sanctum Sanctorum, Artha Mandapa followed by Maha Mandapa. Till Prastara Squared shaped Nagara Vimana and above that Gajaprishta Vimana was constructed. This type of Gajaprishta Vimana called Thoonganai madam mainly built in the Pallava period. In Koshta, We can see Vinayagar, Dakshinamurthy, Mahavishnu, Brahma, and Durgai.

History:
As per the inscriptions, during the Uthama Chozha Period, this place was called Utama Chozha Chaturvedi Mangalam. During the Kulottunga Chola-I period, this place was called ValaNadu Thirayanur Kulothunga Chozha Chaturvedi Mangalam. The inscriptions belong to Virarajendra, Kulothunga Chola-I, Kulothunga Chola-I, Kulothunga Chola-III, Rajadhiraja II, Sundara Pandya found here. Most of the inscriptions record the grant made for this Temple. The Archaeological Survey of India recently renovated the Abathsahayeswarar temple.


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici


Chithiram Pesuthada