ஐப்பசி சதய நாயகன்!

Rajaraja I

சோழ தேசத்தை புகழின் உச்சிக்கும், வீரத்தின் உச்சிக்கும், கலையின் உச்சிக்கும் எடுத்து சென்ற ஒப்பற்ற தமிழ் வேந்தன், மக்களின் உள்ளங்களை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று நம்மை கவர்ந்து ஆட்சி செய்கின்ற பொன்னியின் செல்வனான, சோழ தேசத்தின் செல்லப்பிள்ளை, இராஜராஜீச்சரம் என்ற மாபெரும் கோயிலை தந்த சிவபாதசேகரன், தனக்கு மரணமே இல்லை என்பதை உலகறியச் செய்த சோழ மாமன்னன் அருமொழி வர்மரான உடையார் ஸீ இராஜராஜ சோழ தேவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தஞ்சை மாநகருக்கு அடையாளமாகத் திகழ்வது உலகப் புகழ்பெற்ற பெருவுடையார் கோயில் எனும் இராஜராஜேச்சுவரம். ‘தட்சிண மேரு’ எனும் பெருவுடையார் கோயிலின் ஸ்ரீவிமானம் விண்ணை முட்டி கம்பீரமாய் நிற்கின்றது. இந்த அறிய பொக்கிசத்தை நமக்கு விட்டுச்சென்றவர் மாவீரன் இராஜராஜ சோழன்!.

இவ்வேந்தன் மலையாள தேசத்தில் வள்ளுவ நாட்டிலுள்ள முட்டம் என்னும் ஊருக்கு மும்முடி சோழநல்லூர் என்று பெயரிட்டு, அதனை அந்நாட்டில் திருநந்திக்கரையிலுள்ள கோயிலுக்கு இறையிலியாக அளித்துத் தான் பிறந்த ஐப்பசித்திங்கள் சதய நாளில் விழா நடத்துமாறு ஏற்பாடு செய்துள்ளமையால்! , இவன் ஐப்பசித் திங்களில் சதய நாளில் பிறந்தவன் என்பது பெறப்படுகிறது.

இராசராசனுக்கு பெற்றோர்கள் இட்டு வழங்கிய பெயர் அருண்மொழி வர்மன் (அருமொழி வர்மர் | அருள்மொழி வர்மன்) என்பது. இவரது ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் இவருக்கு இராசராசன் என்னும் பெயரே வழங்கிவந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.

இராசராச சோழன் பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கியதால் அதுபற்றிப் பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு அந்நாளில் வழங்கின என்பது கல்வெட்டுக்களால் அறிய முடிகின்றது. இராசராச சோழருக்கு, அபயகுலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள்மொழி வர்மன், அழகிய சோழன், இரணமுகபீமன், இரவிகுலமாணிக்கன், இரவிவம்சசிகாமணி, இராஜகண்டியன், இராஜசர்வக்ஞன், இராஜராஜன், இராஜராஜகேசரிவர்மன், இராஜாச்ரயன், சோழேந்திரசிம்மன், இராஜமார்த்தாண்டன், இராஜேந்திரசிம்மன், இராஜவிநோதன், உத்தமசோழன், உத்துங்கதுங்கன், உய்யகொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்ட பராக்கிரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாதசேகரன், சோழகுலசுந்தரன், சோழ மார்த்தாண்டன், திருமுறை கண்ட சோழன், தெலிங்ககுலகாலன், நிகரிலிசோழன், நித்யவிநோதன், பண்டித சோழன், பாண்டியகுலாசனி, பெரியபெருமாள், மும்முடிச்சோழன், மூர்த்திவிக்கிரமாபரணன், ஜனநாதன், ஜெயங்கொண்டசோழன், சத்திரியசிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழநாராயணன், தைலகுலகாலன் என்றெல்லாம் பட்டப்பெயர்கள் இருந்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Rajaraja I, Thirukoteeswarar Temple, Thirukodikaval
Rajaraja I, Thirukoteeswarar Temple, Thirukodikaval

இராசராச சோழன் ஆட்சியின் பிற்பகுதியில் சோழ இராச்சியம் மிக உயர் நிலையில் இருந்தது எனலாம். பாண்டி மண்டலமும், சேரமண்டலமும் அடங்கிய இராசராசத் தென்னாடும், தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழமண்டலமும், கங்க மண்டலமும், கொங்கு மண்டலமும், நுளம்பபாடி நாடும், கலிங்க நாடும், ஈழமாகிய மும்முடி சோழமண்டலமும் இவரது ஆட்சிக்குட்பட்டிருந்தன என்று உறுதியாகக் கூறுகின்றனர் வல்லுநர்கள்.

Karuvurar (left) with Rajaraja I (right)
Karuvurar (left) with Rajaraja I (right)

சிவபெருமானிடத்தில் அளவற்ற பக்தியால் இராசராச சோழன் ‘சிவபாதசேகரன்‘ என்ற சிறப்புப் பெயர் உடையவர் என்பது தஞ்சையில் எடுப்பித்த பெருங் கோயிலாலும் அதற்கு வழங்கியுள்ள நிவந்தங்களாலும் அறிய முடியும்.

இராசராச சோழருக்கு பல மனைவிமார்கள் இருந்துள்ளனர். அதில் பட்டத்தரசியாக விளங்கியவள் உலோகமா தேவியாவாள். சோழ மாதேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன்மாதேவி, அபிமானவல்லி, இலாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வில்லவன்மாதேவி, வானவன்மரதேவி என்போர் இராசராச சோழரின் மனைவிமார்கள் . அவர்களுள் வானவன் மாதேவிக்குத் திரிபுவனமாதேவி என்னும் மற்றொரு பெயரும் உண்டு. அவ்வரசியே இராசேந்திர சோழனைத் தன் மகனாகப் பெற்ற பெருமையுடையவள்!!.

இராசராச சோழன் தன்னை “அரசர்களுக்கு எல்லாம் அரசன்” என்று புகழோடு வாழ்ந்தார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது என்றால் அதில் ஐயமில்லை. தென்னிந்திய வரலாற்றில் இராசராசனின் காலம் ஒரு பொற்காலமாகும். இராசராச சோழன் விட்டு சென்ற அறிய பொக்கிசங்கள் தனக்கு மரணமே இல்லை என்பதை உலகறியச் செய்து இன்றும் நம் மனதில் நிலைத்து நிற்கிறது.


Birth anniversary of the Great Raja Raja Chola!!!

Brihadisvara Temple, Thanjavur

As an Administrator, Intense warrior, and lover of beautiful art and architecture, Raja Raja Chola I (Rajaraja I) is an inevitable character in Tamil and world history. Raja Raja was born in 947 in Aipassi month on the day of Sadhayam star, and today is his birthday.

Raja Raja Chola was born in Tirukoilur (headquarters of Nadu Naadu) as Arulmozhi Varman (Arumozhi Varmar or Arunmozhi Varmar), the third child of Sundara Chola and Vanavan Maha Devi of the Velir Malayaman dynasty. Aditya Karikala was the elder brother, and Kundhavai was the elder sister.

During his reign, the Cholas expanded beyond South India, stretching their domains from Sri Lanka to Kalinga in the north. Raja Raja’s adopted name Raja Raja means “King of Kings“. He was also known as “Rajaraja Sivapadha Sekhara” (he who had the feet of Lord Shiva as his crown). In his period Rajaraja created a powerful standing army and a large navy.

Rajaraja built the Brihadishvara Temple in Thanjavur, dedicated to Lord Shiva. The temple and the capital acted as a centre of both religious and economic activity. It is also known as Tanjore Periya Kovil (Thanjai Periya Kovil), RajaRajeswara Temple and Rajarajeswaram. It is one of the largest temples in India and is an example of Dravidian architecture during the Chola period.


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici


Reference: பிற்காலச் சோழர் சரித்திரம் by சதாசிவபண்டாரத்தார், தி. வை.

Chithiram Pesuthada